Feb 5, 2011

நான் பிறவாமல் இருந்திருந்தால்
அவள் கலங்காமல் இருந்திருப்பாள்

எனை காதல் கொள்ளாமலிருந்திருந்தால்
அவள் சந்தோஷமாக இருந்திருப்பாள்

எனை மணக்காமல் இருந்தாலாவது
ஆனந்தமாக வாழ்ந்திருப்பாள்

நான் இறந்துவிட்டால்
இனி வரும் காலமாவது
நிம்மதி உண்டாகுமல்லவா?

நாளுக்காக காத்திருக்கிறேன்
நாதியற்ற பிணமாய் செல்ல...
பொழுது போகவில்லையடி
உன் பூ முகம் மலராமல்
நாதியற்று கிடக்கிறேனடி
நின் அரவனைபில்லாமல்
நான் மாறிவிட்டேனென்று
அவளாயிரம் முறை சொன்னாலும்

என் மனதுக்கு தெரியும்
அவள் பால் கொண்ட காதல்
எள்ளளவும் குறையாதென்பது

இது அவளுக்கும் தெரியும்
என் மனம்
அவளின் மனதில் இருந்த போது

ஒருதலை

அவளின் சந்தோஷம் என் வாழ்வில்
என்றெண்ணி வாழ்வை துவங்கிய நேரம்
என் பிரிவில் தான்
அவளின் நிம்மதி என்று கண்டேன்
அவளுக்காக இறக்கவும் துணிகிறேன்

காதல் கல்யாணம்

முன்பெல்லாம் நான் என்றாலே
அவளுக்கு சந்தோஷம்-இப்பொழுது
நான் மட்டுமே
அவளின் சங்கடம்
அந்தி வேளையில்
உனை அள்ளி எடுத்து

அல்லி மணம் வீசும் அர்தஜாமத்தில்
இணைபிரியா பிணக்கம் கொண்டு

தூங்காத விழிகளுக்கு
காலை பூபாளமாய்
உன் முத்தம்
என்றும் மறவாமல் வேண்டும்

Jan 26, 2011

மனித சக்தியை நாடிய
மனம் என்றோ மாண்டுவிட்டது
இயந்திர சக்தியை நாடும்
இயந்திரமே இன்று உலவுகிறது

அன்பு அரவணைப்பு உபசரிப்பு
எங்கே போனது?
இயந்திரத்தை போல்
இயற்க்கை அழகை இழந்தது ஏன்?

எனக்கோ சந்தேகம்
எனை சுற்றி மனித சமூகம் தான் உள்ளதா?
நானும் மனித இனத்தை சார்ந்தவன் தானா?