Oct 15, 2017

சூழ்நிலை தவறோ
சுயசிந்தை தப்போ - திருந்தும்
மனம் கோரும் மன்னிப்பு
தீயில் விழுந்து
உயிர்பெற்ற உயிருக்கு சமம்

வடு நீங்க மருந்து தேடும் போது
அதை குத்தி புண்ணாக்கி
மனம் தன்னை மாய்க்கும்
சொல்லும் செயலும் வேண்டா
செவியோரம் இசையும் கருத்தும் வேண்டா




காமமெனும் கரையேறி 
காதலெனும் வீட்டில் 
உறவு கொள்ளும் உயிர்களில் 

உறங்கா அன்பு ஆடும் 

தோழமை எனும் 
தோகை அழகாய் விரியும்
 
வாக்குவாதம் குறையும் 
வாழ்க்கை வண்ணமயமாகும் 
என்னை பார்த்து வளராதே
நான் வாழ்ந்தது எனது வாழ்வு

உனை ஆராய்ந்து
உள்நோக்கி பார்த்து
பக்குவதோடு பழகி
பல்கி பெருகும் நற்குணம் கொண்டு
அன்பு ததும்ப அரவணைக்கும் கரம் நீட்டி
அண்டமெல்லாம் நின் புகழ் பரவ வாழ் 
நானென்ற கர்வமழிக்க
நாண் தொடுப்போம்
சுயநலமில்லா சிந்தை சமைப்போம்
சுவாசக்காற்றை சுயமரியாதை யோடிணைப்போம்
சித்தம் மாறா நேர்மை கொள்வோம்
சிரமே போகினும் உரிமை காப்போம் 
தற்பெருமை பேசுவோருக்கு 
தரமான பதில் ஒன்று உண்டெனில்  
அது தரம் தாழ 
தக்க நேர மௌனம் 

உண்மையின் வீரம் 
உறங்கி போன மனதை எழுப்பும் 

புலம்பி புலம்பி 
புண் மொய்த்த இதயங்கள் கூடும் 
புதியதொரு வழி பிறக்கும் 

Jun 29, 2015

கயல்விழியால் கொக்கென கொத்தி
மலரிதழால் கனிச்சுவை தரும் நீ
ஒரு முரண்பாட்டு கவிதையே 
மனிதம் மறந்த மனிதர்கள் மத்தியில்
மனிதனாய் வாழ முயற்சிக்கிறேன்

அவமானங்களும் கேலிகளும் மட்டுமே
ஒவ்வொருநாளின் எச்சமாக முடிகிறது

இருந்தும் விடியலுக்காக காத்திருக்கிறேன்
மனிதம் மறவா மனிதனாய் வாழ 

May 20, 2015

அழகே!
தேகம் தேய தேடி
மனம் வாடி
கண்கள் தவிக்க
தாய் கண்ட சேயாய்
நான் ஆர்பரிப்பது எப்போது?
உன் வாசனையும் நினைவும்
நீங்காத நெஞ்சோடு
உன் மலர்மடியில் பள்ளிகொள்ள
சேய் கண்ட தாயாய்
எனை அணைப்பது எப்போது?

Feb 5, 2011

நான் பிறவாமல் இருந்திருந்தால்
அவள் கலங்காமல் இருந்திருப்பாள்

எனை காதல் கொள்ளாமலிருந்திருந்தால்
அவள் சந்தோஷமாக இருந்திருப்பாள்

எனை மணக்காமல் இருந்தாலாவது
ஆனந்தமாக வாழ்ந்திருப்பாள்

நான் இறந்துவிட்டால்
இனி வரும் காலமாவது
நிம்மதி உண்டாகுமல்லவா?

நாளுக்காக காத்திருக்கிறேன்
நாதியற்ற பிணமாய் செல்ல...
பொழுது போகவில்லையடி
உன் பூ முகம் மலராமல்
நாதியற்று கிடக்கிறேனடி
நின் அரவனைபில்லாமல்
நான் மாறிவிட்டேனென்று
அவளாயிரம் முறை சொன்னாலும்

என் மனதுக்கு தெரியும்
அவள் பால் கொண்ட காதல்
எள்ளளவும் குறையாதென்பது

இது அவளுக்கும் தெரியும்
என் மனம்
அவளின் மனதில் இருந்த போது

ஒருதலை

அவளின் சந்தோஷம் என் வாழ்வில்
என்றெண்ணி வாழ்வை துவங்கிய நேரம்
என் பிரிவில் தான்
அவளின் நிம்மதி என்று கண்டேன்
அவளுக்காக இறக்கவும் துணிகிறேன்