Nov 4, 2009

ஏதோ தயக்கம் வந்து
உன் நெஞ்சை உறுத்த
அதை மறைக்க
நீ ஏதோ சொல்லி செல்ல
அதை அறிந்தும் அறியாதவனாய்
உன் முடிவுகளுக்கு சம்மதிக்கிறேன்
உனை போலவே
நீ என்னிடம்
ஆசைப்பட்டு கேட்ட
குங்குமச்சிமிழ்
வீட்டுக்குள் முடக்கி கிடக்கிறது

மண் மூடி போன
எனதாசைகளை போல் - இன்னும்
மூடி கூட திறக்காமல்
காத்து கிடக்கிறது....
நீ பக்கத்தில் இருந்தால்
பகல் எது?
இரவு எது?
என்பது தெரியாமல்
உன்னில் மயங்கி கிடக்கிறேன்
நான் இப்போது தரும்
முத்தங்களை எல்லாம்
உன் நெஞ்சுக்குழியில் சேர்த்து வை
உனக்கு முன்
நான் இறந்துவிட்டால் - அந்த
முத்த சத்தத்தில்
இன்னும் நூறாண்டு வாழடி
என் காதலியே!
கோதை உந்தன்
இதழில் குடி கொண்டு
உன் உமிழ்நீரில்
தாகம் தனிய வேண்டும்
எனக்கு குளிரெடுத்தால்
உன் மார்போடு அணைத்துக்கொள்
அந்த கதகதப்பே போதும்
என் ஆயுள் முழுதும்
நான் உனக்கு யாரென்று தெரியுமா?
உனக்கு செல்ல பெயர் வைத்த போது
உன் தந்தை
உன் மேல் அளவில்லாத பாசம் காட்டும் போது
உன் தாய்
உன் சோகம் களையும் போது
உன் நண்பன்
உனை மகிழ்விக்கும் போது
உன் காதலன்
உந்தன் அந்தரங்கம் அறியும் போது
உன் கணவன்

காதலியே!
உன் கோபம் அனைத்தையும்
என்னிடம் காட்டிவிடு
அதை தாங்கும் பெருமையும்
எனையே சேர வேண்டும்
பூங்கொடி உனை
கொய்ய வந்த
பூவரசன் நான்

காம்பெனும் மேனி தொட
கூச்சத்தில் முகம்
சிவந்து விரிகிறாய்

அதரம் தொட
பெண்மையின் மென்மையால்
எனை அணைக்கிறாய்

பூ பறிக்க வந்த நான்
பூவை ரசித்து
புன்னகையோடு போகிறேன்

என் தமிழை
உனக்கு உடையாய் உடுத்தி
ஒவ்வொரு வார்த்தையாய்
எடுத்து பார்க்கிறேன்
உன் பெயர் போல்
அழகான வார்த்தை வருமா என்று
கட்டிலில் கட்டி கொண்ட போது
என் நெஞ்சில் ஒட்டிய
உன் தலை முடி மேல்
ஏன் இவ்வளவு கோபம்?
நீ வாழும் இடத்தில்
ஏதும் வந்து
ஒட்டி கொள்ள கூடாது என்பதற்கா?
எனை தூய்மைபடுத்துவது
உன் முத்தம்
நாள் தவறாமல்
எனக்கு முத்தம் கொடுத்துவிடு
என் அசுத்தங்களெல்லாம்
அப்பொழுதே ஒழிந்து விடட்டும்
உன் உதட்டில்
மறைந்து கிடக்கும் உண்மைகளை
என் இதழால் உரியட்டுமா? - அப்போதாவது
எனக்கு ஏதாவது தெரியட்டும்
உன் இதழ் தொடும் நேரம்
கடைவிழியில் காதல் சொல்லி
இதழ் விரித்து
காமம் அதை தூண்டி
ஒன்றும் அறியாதவளாய்
வெட்கம் கொள்வாயே
இன்னும் என் மோகத்தை கூட்ட
காதல் வந்து
எனை தொட
காற்றாய் மாறி
உனை தீண்டினேன்
எங்கு தொட்டாலும்
உன் கன்னம் சிவக்க கண்டேன்

சிவந்த கன்னத்தில் முத்தமிட்டால்
கண்கள் சொருகி
எனை இறுக அணைக்க
இன்னும் ஒரு முத்தமிட்டேன்
என் சுவாசம்
உன் நினைவானது
நான் உரு மாறி
நீ ஆனேன்

Nov 3, 2009

அழகு என்பது
உன் உடன்பிறந்த ஆயுதம்
அதை எடுத்து
உன்னோடு போராட
எனை அழைத்தாய் முத்தத்தால்
உன் இதழ் தொடும்
தூரத்தில் என் கன்னங்கள் இருக்க
கண் மூடிக்கொண்டு நான் பறக்க
உன்னிதழ் என்னிதழை
தொட்டு சென்றது ஏன் ?
உனக்கு தெரியாமல்
உன் புகைப்படத்திற்குதானே
முத்தமிட்டேன் !
உனக்கேன் வெட்கம் வந்தது
சிரித்தாய்
சிதைத்தாய்
சிவந்தேன்
மறந்தேன்
ஒருவனுக்கு ஒருத்தி
என்பதை மனதில் நிறுத்தி
நான் பெற்ற திருமதி
வாழ்வில் நான் பெற்ற மிகப்பெரிய வெகுமதி