Sep 19, 2009

அவன் என்பால்
கொண்ட காதலை
கேளடி தோழி !

கண்டால் கொத்தும் பாம்பென
ஆயிரம் பேர் வீதியெங்கும் காத்திருப்பார்
உற்றுப் பார்த்து
எட்டு வைக்கும் கள்வனை போல்
வீட்டு வாசற்படி வரை
யாரும் அறியாத வழித்துணையாய்
வழிப்போக்கன் போல் வருவானடி

சூரியன் மறைய
சந்திரன் ஒளி வீசுவது போல்
விழி திறந்திருந்தால் முன் நிற்பான்
மூடிய விழியானால் சிந்தையில் நிற்பானடி

இரைச்சல் நிறைந்த இந்த உலகில்
மௌனமான என் தாக ஓசை கேட்டு
தாகம் தணித்து வியப்பூட்டுவானடி

ஒன்றும் அறியாத பாலகனை போல்
பாசாங்கு செய்வது அறிந்தும்
அவன்பால் ஈர்ப்பு கூடுதடி

No comments: