Sep 19, 2009

அழகியவள் கொண்ட காதல்
அழிவுருமென்று ஐயம் கொண்டாளோ!
உலவித் திரியும் காற்றே
உதவியென எனக்கொன்று செய்
தோழியாய் அவள்மேனி தடவி
தோற்காது உன்காத லென்றுரைத்து
காதலன் யான் உரைப்பதை
காதில் நயம்பட தெரிவி
ஒருநாள் பூமிசுற்ற மறந்தாலும்
ஒருநாளும் மனமுனைசுற்ற மறப்பதில்லையடி
பாதாளசிறையில் அடைபட்டு அடிபட்டாலும்
பாவையுன் பவளமுகம் மறப்பதில்லையடி
நஞ்சுண்டு நீலநிறம் பெற்றாலும்
நங்கையுன் நற்குணமும் மறப்பதில்லையடி
நாச்சியே!
நானழியும் நிலை வந்தாலும்
நீகொண்ட காதல் அழியாதடி
நீயே இப்பச்சியின் நீடமடி

No comments: