Sep 19, 2009

பகுத்து பார்த்து
அறிவு சொன்ன
பெரியாரும் தோற்பானடி
உன் பருவமெதுவென்று

அணையா தமிழுணர்வு
மனதில் ஏற்றிய
பேரறிஞனும் தோற்பானடி
உன் தமிழைக்கண்டு

சொல்லை பிரித்து
கரு சொல்லும்
கலைஞரும் தோற்பானடி
உன் மௌனமொழியில்

தென்றல் உனை தீண்ட
இசைஞானியும் தோற்பானடி- நீ
தோல்கருவியா நரம்புக்கருவியாவென்று

மனதிலக பாடும்
கானக்குரலனும் தோற்பானடி
உன் மூச்சுக்குரலில்

செய்கையில் புதுமை செய்யும்
ரஜினியும் தோற்பானடி
உன் கண் சமிஞையில்

எனக்கு பிடித்த
அத்தனை பேரும்
உன்னிடம் தோற்றனர்
நான் உனை அடைந்து மகிழ்ந்திடவே

No comments: