மேனி ஏங்கும் மஞ்சள்
நான் பூச
கூச்சம் தாளாமல் சிரிக்கிறாள் - இவள்
உள்ளங்கை என் மார்பு தொடுகையில்
அந்தரங்க துன்பமெல்லாம் தண்ணிராய் கரைகிறது
என் சிரிப்பு கண்டு
வெட்க மிகுதியில் சிரிக்கிறாள்
செவ்விதழ் விரித்து
எனை சிவிகையில் ஏற்றுகிறாள் - இவளை
காணாத கணங்கள்
மனம் கங்காய் கொதிக்கிறது
இவளை கண்டதும்
வேதனை எல்லாம் வெந்து ஒழிந்தது
எனை கட்டி தழுவி
தோளில் தோகை விரித்தாடும்
இளமயில் இவள்
என் மார்பும் கழுத்தும்
இவள் புரளும் பஞ்சனைகள்
வேறு யாரு
என் மகள் தரும் முத்தம்
முக்கனி சுவையையும் மிஞ்சும்
அந்த முத்த ஈரம்
என் உள்ளுர
இறங்கும் உரம்
No comments:
Post a Comment