அண்ணா பாராட்டி
தனித்தன்மையாய் மணம் வீசும்
குவளை மலரே!
இங்கோ? அங்கோ? எங்கோ?
எங்கள் "கோ" என்று தேடுகையில்
இருள் நீங்க
காலை பகலவனாய் உதித்த
உதய சூரியன் நீ
போர்வைக்குள் பதுங்காமல்
போர்க்களம் தேடித்தேடி
வென்றவன் நீ
தடியடி பெற்று
வள்ளுவன் சமைத்த தமிழுக்கு
செம்மொழி கனி
படைத்தவன் நீ
துரோகங்கள் வஞ்சனைகள்
ஆயிரம் கண்டு
அதை அனைத்தையும்
துடுப்பாய் கொண்டவன் நீ
உனை பார்த்து வாரிசு
அரசியல் நடத்துகிறான் என்கின்றனர்
வரியவருக்கு வாரி இசையும்
அரசியல் நடத்துபவன் நீ
சாதிகள் சங்கமிக்கும்
சமுத்திரம் நீ
திராவிடராகிய எங்களின்
கருப்பு கண்ணாடி அணிந்த
கர்ணன் நீ
எளியோர் வாடுகையில்
கரம் நீட்டிக்காக்கும்
வலுக்கை உடையவன் நீ
நெட்டையனை நம்பினாலும்
குள்ளனை நம்பாதே - இது பழமொழி
சாத்திரங்களை பொய்யாக்கும்
இந்த குள்ளனை நம்பித்தான்
இந்த தமிழினமே
நீ என்னினத்தின் இதயத்துடிப்பு
உன் ஓய்வு அன்று
தமிழினத்தின் மரணம்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
இது பிறர் கூற்று
என் மட்டில்
நீ வயதான வாலிபனே
வாழ்க நீ பல்லாண்டு
No comments:
Post a Comment