நினைவு பிந்தி பின் சென்றது
பேருந்து எதிர்காலம் நோக்கி செல்ல
உடல் நிலைத்து நிகழ்காலத்தில் நிற்க
நினைவு மட்டும் இறந்த காலத்தில் நீந்தியது
ஜன்னல் வழி காட்சி காட்ட - அவள்
தலை முடி என் முகம்
உரசிய சுவடு மாறவில்லை
என் ஐவிரல் இடுக்கில் - அவள்
நால் விரல் சேர இறுக்கி
மறவாதே என்றதும் மறக்கவில்லை
ஊரார் பார்ப்பது மறந்து - அவளை
ரசித்த நேரம் மறையவில்லை
தோல் சாய்ந்து
பார்த்த பார்வையின் ஏக்கம்
நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை
தோலும் தோலும் உரசி
அடி வயிற்றில் தோகை விரிந்ததை
தோண்டி புதைக்கவில்லை
தாய் மடியாய் தலை சாய்ந்தேன் - அவள்
காதலியாய் காது கடித்தது நினைவிலக்கவில்லை
நான் உச்சியில் இட்ட முத்தம்
அவளை மொத்தமாய் ஊமையாக்கி
கள்ளச்சிரிப்பு கொண்டது கலயவில்லை
வெட்கம் தாளாமல் தலை குனிந்து
என் மார்பில் இட்ட முத்தம் கரையவில்லை
வலக்கரம் கொண்டு முகம் தூக்க - அவள்
ஏக்கங்களை கண்ணில் காண்பித்தது அழியவில்லை
தொடாத பாகம் தொட
ஓட்டுநர்
நிருத்தியை தீடிரென்று அழுத்த
நிலை தடுமாறி ஒரு நிலைக்கு வந்து
அருகில் இருந்த இருக்கையை பார்த்தால்
யாரோ!!!
சிரித்துக் கொண்டு
உடலும் நினைவும் ஒன்று சேர
பயணமானோம் நிகழ்காலத்தில்
No comments:
Post a Comment