வறண்ட போதும்
தான் வறச்சி காட்டா
வளமையின் போது
வைரமாய் மின்னும் வைகை
காதலர்கள் வசந்தகால பறவையாய் கூடும்
அழகர் மலை
கார்த்திக்கேயனின் சமத்துவம் காட்டும்
பரங்குன்ற குன்று
சமண முனிகளின் சாகசம் காட்டும்
சமண மலை
யானை வயிற்றில் அழகன் உருவெடுத்த
யானை மலை
மன்னனாய் வலம் வர தூண்டும்
நாயக்கர் மஹால்
பெண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்தும்
மீனாட்சி கோயில்
இதுதான் சிற்ப வேலை என்றுணர்த்தும்
பாண்டியன் குடைகுகை
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
ஆலவாய் நகரை பற்றி
கேளடி தோழி !
குருடருக்கும் பார்வை வருமடி
செவிடருக்கும் செவி திறக்குமடி
ஊமையருக்கும் மொழி பொழியுமடி
முடவருக்கு கால்கள் நடனமாடுமடி
இந்த நான்மாட கூடல் மாநகரிலே
"அக்கரைக்கு இக்கரை பச்சை"
என்பது முதுமொழியடி
"எக்கரையும் பச்சை "
மருதத்துக்கே உரித்த மொழியடி
காலை பனி
வயலோடு உறவாடுமடி - குத்தாமல்
ஊசியென நாசி வழியிறங்கும் குளிர்
இதனோடு உறவாட மனமேங்குமடி
உள்ளம் கவர்ந்தவர்
கண்கள் தேடும் விழாவடி
மனசிரமம் தீரும்
சித்திரை திருவிழாவடி
தேர் ஓடி விளையாடும் வீதியடி
விதி வினை தீரும் ஊரடி
இதுவே எங்கள் மதுரையடி
No comments:
Post a Comment