Sep 18, 2009

தமிழ்


தோன்றலரியா தொன்மையானவள்
அரசன் அரவணைப்பிலும்
புலவர் புகழிலும்
சதியின்றி சங்கத்தில் வளர்ந்தவள்
தொடர்புக்கு தோன்றியவள்
தோகைவிரித்தாடுகிறாள்
பழமை மரபு மறவா
அறவழி நடத்தி செல்பவள்
அஞ்சாமை கொள்கை பரப்புபவள்
நட்புறவு நாடி வருவோர்
நல்லவரெனில் 'பிசிர்' போல் உயிர் தருபவள்
பழிவாங்கும் பண்பை
பாசறையிலும் கல்லாதவள்
இடையூர் ஆயிரம் வந்தாலும்
பேர் இடியாய் இடித்து
மின்னலாய் தகர்ப்பவள்
எளிதில் பகைமை கொள்ளாமல்
பாச வலை வீசுபவள்
மாற்றார் கருத்துக்கு
கருத்துன்மை காண
கனிவுடன் செவி சாய்பவள்
உரிமை என்றால்
உறவறுத்து உரை வாள் ஏந்துபவள்
வஞ்சனையுடன் வருபவர் வறியர் என்றால்
வாகை சூட வைத்து அழகு பார்ப்பவள்
பழி வருமெனில்
தாலி கழற்றி எறிபவள்
ஆத்திகனோ நாத்திகனோ
திராவிட உணர்வு வேண்டுபவள்
வீல் என்று கதறி வரும் பிள்ளையை
வீரமாய் வளர்ப்பவள்
விவேக வேதியலை
கற்றுக் கொடுப்பவள் - எனவே
வீரத்திற்கும் விவேகத்திற்க்கும் பஞ்சமில்லை
போவது தன்மானமெனில்
துறப்பது உயிர் என்றிருப்பவள்
தன் குணத்தை தாங்கி வரும்
தமிழனின் வாழ்வு கண்டு
தலை நிமிர்ந்து நடைபோடுபவள்
அரசாட்சியில் அரியணை ஏறியவள்
மக்களாச்சியிலும் மணம் வீசுகிறாள் - எனவே
வரலாற்றை மிஞ்சுபவள் என்போம்

No comments: