Sep 18, 2009

சங்க கால மூவர்
அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர்
சிவபுகழ் வளர்த்தனர்
எங்கள் கால மூவர்
பெரியார் அண்ணா கருணாநிதி
திராவிட உணர்வை வளர்த்தனர்
இவர்கள் வழியில்
தமிழகம் செழிக்க
கங்கை இந்துமாகடல் சேர வேண்டும்
சேது கால்வாயில் கப்பல் நீந்த வேண்டும்
சித்த மருத்துவம் முதன்மை பெற வேண்டும்
அறிவியல் நடப்பு முறையறிந்து
செயல் திட்டம் தீட்ட வேண்டும்
ஏர் உழும் கிழவன்
உண்டு ஏப்பம் விட வேண்டும்
விவசாயம் அறியாத தமிழன்
ஒருவரும் இலர் என்ற நிலை வேண்டும்
கைத்தொழிலை
கட்டாய பாடமாக்க வேண்டும்
மன உறுதிக்கு பள்ளியில் தியானம்
நடைமுறை படுத்த வேண்டும்
ஊழல் ஊற்றை
காலால் மிதித்திட வேண்டும்
சாதி என்னும் சாக்கடை புழுவை
மருந்தடித்து அழித்திட வேண்டும்
தமிழ் திராவிட உணர்வை
பிறப்பிலிருந்து ஊட்டிட வேண்டும்
மானம் பெரிதென உணர்த்திட வேண்டும்
வேண்டுவென வேண்டி விடைபெறுகிறேன்

No comments: