ஆசியும் ஆதரவும் வேண்டிய பெற்றோரால்
பாச வாளால் துரத்தப்பட்டோம் - வழியின்றி
நால்வர் சூழ நால்வேதங்கள் ஓதின
நகையாடி விளையாடி பழகியவள்
நாணம் கொண்டாள்
மாலை பொழுதின் விடியல்
இவள் விழியில் புலர்கிறது
ஆகாரம் ஊட்டினாள்
மஞ்சள் மணம் கமல
மஞ்சத்தில் மல்லியாய் உதிர்ந்தாள் - இவ்வாறு
இன்பத்தின் இயற்கையாய் இருந்தவள்
நீலிக்கண்ணீரில் காரியம் சாதிக்கிறாள்
வீண் வம்பு தொடுத்து
வெட்டி கௌரவம் பூணுகிறாள்
கோபங்களை குழந்தை மேல் வீசுகிறாள்
'போதுமடா புற்றீசல் வாழ்க்கை' என புலம்பவிடுகிறாள்
'அழகு பதுமையின் நெஞ்சுக்குழி
படுபயங்கர பாதாள இடுகுழி
இமை மூடும் போது
விழிகள் எதை காண்கிறதோ - அதுபோல
பெண்கள் மணம் விளங்காததே' என புரிகிறது
No comments:
Post a Comment