இதயமெனும் இருட்டறையில்
இரத்த ஊற்றாய்
இசையெனும் உணர்வாய்
காணாத கடவுளின் உருவாய் - இப்படி
காதலுக்கு கவிஞர்கள் சில கோடி
ஊரெங்கும் தேடி
உறவாய் நாடி
விழிகள் மூடி
எண்ணங்கள் ஓடி
சிந்தையில் கனவில் பாடி - இப்படியும்
காதலுக்கு கவிஞர்கள் பல கோடி
கோடி கோடியாய் கவிதை பாடி
காதலை வாழவைக்கும் கவிஞர்களே!
காதல் ஒன்று தான் உலகில் உள்ளதோ?
காதலை தவிர வேறொன்றும் உள்ளத்தை தொடவில்லையோ?
ஒரு வேலை சோற்றுக்கு மனிதன்
பாலுக்கு அழும் மழலை பார்த்ததில்லையோ?
விபச்சார ஒழிப்பு
மதுவிலிருந்து விடுதலை
திருட்டை திருட வழிமுறை
நல்லொழுக்கப் பாதையில் மனிதன்
இவற்றில் சிந்தையில்லையோ ?
No comments:
Post a Comment