Sep 18, 2009

முதல் பின்னிரவு


பஞ்சனை கசங்கி
பூக்கள் நசுங்கி
ஒரு போராட்டம்
நடந்த களைப்பில்
ஆடைகள் அவிழ்த்து
காற்று புகா நெருக்கம் கொண்டு
காலை பனித்துளி போல்
உடலெங்கும் வியர்வை தளைத்திருக்க
கணவன் மனைவியிடம்
"பாலுண்டேன் தேனுண்டேன்
இரண்டும் கலந்துகொண்டேன்
இன்று உண்டா தெவிட்டாத
உணவை உண்டதில்லை" என்றான்
அவள் கூச்சத்துடன் சிரித்து
முகம் திருப்பினாள்
விடுவானோ இவன்
தன் விரல்களால்
கன்னங்களை தடவி திரும்பச் செய்தான்
"மோக பார்வையாலும்
மெல்லிய சிரிப்பாலும்
எனை தோற்க்கடித்தாயடி" என்றான்
"தோற்றது நானே" என்றாள்
"அன்பே உன் முகம்
இந்த இரவிலும் சந்திர ஒளியை
மிஞ்ச காரணம் என்ன? " வினவ
"இந்த சூரியகிரகணம் தான்
காரணம்" என்றாள்
"உனை வர்ணிக்க ஆசையாய்
உள்ளேன் அனுமதி கிடைக்குமா? " என்றான்
அமைதியாய் ஆர்ப்பாட்டம்
செய்யத்தெரிந்த உங்களுக்கு
அனுமதி என்னிடம் எதற்கு?" என்றாள்
"கண்ணே வில்லின் உட்புறமாய்
அழகாய் செதுக்கப்பட்ட இடையில்
இருக்கின்ற காலம் வரை
என் இரு(க்)கை அதில் தான்"என்றான்
"வேண்டாம் வினையின் விளைவரியாரே?" என்றாள்
மோகப்பார்வையால்
காமந்தனை கடந்து
கலப்படமற்ற காதலை பெற்று
மனக்காயங்களை உற்று
நேரம் கழிந்தது
மார்பெனும் மண்டபத்தில்
தன் தலை சாய்த்து
"உமை அறிய ஓர் இரவு போதுமோ?
என் உள்ளங்கவர்ந்த கள்வனானாய்" என்றாள்
"மொழிகளில் தேன் தெளிக்கும்
வித்தையை எங்கு கற்றாயோ?
இந்த இனிய சொற்களில்
தலை கிறுகிறுத்து போனேனடி" என்றான்
வெட்கம் தலைக்கேற முகம் மூடினாள்
"அழகே" என்றழைத்து
தன் விரல்களால் அவள் விரல் தொட்டு
"உன்னிடம் ஆயுள் கைதியாகிய நான்
இந்த விரல் சிறையிலிருந்து
என்னழகை மீட்பது எப்படியோ? என்றான்
சூரியரை பார்த்த பனித்துளியாய்
காலை மலரும் மொட்டாய்
இளந்தென்றலில் அசையும் செடியாய்
தத்தித்தத்தி நடை பழகும் குழந்தையாய்
அவள் முகம் காட்ட மெய்மறந்தான்
புன்னகை செய்து புன்னகை செய்து
இருவரும் மனம் தனை திறந்தனர்
முன்னடந்தவையும்
பின் செய்வது என்ன? பேசுகையில் - இளந்தென்றல்
மேனி மீது பட இருவருள்ளும் மோகமுள் பாய்ந்ததே
"என் உயிரே எப்போதும்
இந்த 'இடைவிடா' அன்பு நிலைத்திருக்க
நம்முள் மனக்கசப்பு வராமலிருக்க
நாம் நல்வாழ்வு வாழ..."சொல்வதரியாது திகைத்தான்
"எப்போதும் நீங்கள் வேண்டும்" என்று முடித்தாள்
விழிகளால் அவளை அருகில் அழைத்தான்
தன் விரல்களை அவள் மேனியெங்கும் ஓடவிட்டான்
கூச்சம் தாளாமல் தாவி கட்டி அணைத்தாள்
மதிமுகம் தூக்கி சங்குகழுத்தில் முத்தமிட்டான்
காதில் படர்ந்திருந்த முடியை நீக்கி உஸ்னமூச்சிட்டான்
செய்வதறியாது இன்னும் இறுக அணைத்தாள்
காதோரமாய் அவன்
"பெண்ணே! தீயோன் நல்லாள் மேனி தீண்டவே
கூச்சம் பரவும் முன் தீ பரவுமோ? என்றான்
"ஆம்! தீயோனேன்றால் தீயாய் மாறுவாள் பெண்" என்றாள்
"நான் உனை தீண்டும் போது
தீ பரவவில்லையே! எனை கள்வன் என்றாயே?" என்றான்
சிரித்தபடி"அத்தான், மனங்கவர் கள்வன் வேறு
மாந்தர் கவர் கள்வன் வேறு.
நிருபித்துவிட்டீர் நீர் மனங்கவர் கள்வனென்று" என்றாள்
பொழுது புலர்ந்தது
இருவரும் ஏக்கப்பார்வையால்
"பகல் போய் இரவு வா" என்றழைத்தனர்

No comments: