Nov 4, 2009

ஏதோ தயக்கம் வந்து
உன் நெஞ்சை உறுத்த
அதை மறைக்க
நீ ஏதோ சொல்லி செல்ல
அதை அறிந்தும் அறியாதவனாய்
உன் முடிவுகளுக்கு சம்மதிக்கிறேன்
உனை போலவே
நீ என்னிடம்
ஆசைப்பட்டு கேட்ட
குங்குமச்சிமிழ்
வீட்டுக்குள் முடக்கி கிடக்கிறது

மண் மூடி போன
எனதாசைகளை போல் - இன்னும்
மூடி கூட திறக்காமல்
காத்து கிடக்கிறது....
நீ பக்கத்தில் இருந்தால்
பகல் எது?
இரவு எது?
என்பது தெரியாமல்
உன்னில் மயங்கி கிடக்கிறேன்
நான் இப்போது தரும்
முத்தங்களை எல்லாம்
உன் நெஞ்சுக்குழியில் சேர்த்து வை
உனக்கு முன்
நான் இறந்துவிட்டால் - அந்த
முத்த சத்தத்தில்
இன்னும் நூறாண்டு வாழடி
என் காதலியே!
கோதை உந்தன்
இதழில் குடி கொண்டு
உன் உமிழ்நீரில்
தாகம் தனிய வேண்டும்
எனக்கு குளிரெடுத்தால்
உன் மார்போடு அணைத்துக்கொள்
அந்த கதகதப்பே போதும்
என் ஆயுள் முழுதும்
நான் உனக்கு யாரென்று தெரியுமா?
உனக்கு செல்ல பெயர் வைத்த போது
உன் தந்தை
உன் மேல் அளவில்லாத பாசம் காட்டும் போது
உன் தாய்
உன் சோகம் களையும் போது
உன் நண்பன்
உனை மகிழ்விக்கும் போது
உன் காதலன்
உந்தன் அந்தரங்கம் அறியும் போது
உன் கணவன்

காதலியே!
உன் கோபம் அனைத்தையும்
என்னிடம் காட்டிவிடு
அதை தாங்கும் பெருமையும்
எனையே சேர வேண்டும்
பூங்கொடி உனை
கொய்ய வந்த
பூவரசன் நான்

காம்பெனும் மேனி தொட
கூச்சத்தில் முகம்
சிவந்து விரிகிறாய்

அதரம் தொட
பெண்மையின் மென்மையால்
எனை அணைக்கிறாய்

பூ பறிக்க வந்த நான்
பூவை ரசித்து
புன்னகையோடு போகிறேன்

என் தமிழை
உனக்கு உடையாய் உடுத்தி
ஒவ்வொரு வார்த்தையாய்
எடுத்து பார்க்கிறேன்
உன் பெயர் போல்
அழகான வார்த்தை வருமா என்று
கட்டிலில் கட்டி கொண்ட போது
என் நெஞ்சில் ஒட்டிய
உன் தலை முடி மேல்
ஏன் இவ்வளவு கோபம்?
நீ வாழும் இடத்தில்
ஏதும் வந்து
ஒட்டி கொள்ள கூடாது என்பதற்கா?
எனை தூய்மைபடுத்துவது
உன் முத்தம்
நாள் தவறாமல்
எனக்கு முத்தம் கொடுத்துவிடு
என் அசுத்தங்களெல்லாம்
அப்பொழுதே ஒழிந்து விடட்டும்
உன் உதட்டில்
மறைந்து கிடக்கும் உண்மைகளை
என் இதழால் உரியட்டுமா? - அப்போதாவது
எனக்கு ஏதாவது தெரியட்டும்
உன் இதழ் தொடும் நேரம்
கடைவிழியில் காதல் சொல்லி
இதழ் விரித்து
காமம் அதை தூண்டி
ஒன்றும் அறியாதவளாய்
வெட்கம் கொள்வாயே
இன்னும் என் மோகத்தை கூட்ட
காதல் வந்து
எனை தொட
காற்றாய் மாறி
உனை தீண்டினேன்
எங்கு தொட்டாலும்
உன் கன்னம் சிவக்க கண்டேன்

சிவந்த கன்னத்தில் முத்தமிட்டால்
கண்கள் சொருகி
எனை இறுக அணைக்க
இன்னும் ஒரு முத்தமிட்டேன்
என் சுவாசம்
உன் நினைவானது
நான் உரு மாறி
நீ ஆனேன்

Nov 3, 2009

அழகு என்பது
உன் உடன்பிறந்த ஆயுதம்
அதை எடுத்து
உன்னோடு போராட
எனை அழைத்தாய் முத்தத்தால்
உன் இதழ் தொடும்
தூரத்தில் என் கன்னங்கள் இருக்க
கண் மூடிக்கொண்டு நான் பறக்க
உன்னிதழ் என்னிதழை
தொட்டு சென்றது ஏன் ?
உனக்கு தெரியாமல்
உன் புகைப்படத்திற்குதானே
முத்தமிட்டேன் !
உனக்கேன் வெட்கம் வந்தது
சிரித்தாய்
சிதைத்தாய்
சிவந்தேன்
மறந்தேன்
ஒருவனுக்கு ஒருத்தி
என்பதை மனதில் நிறுத்தி
நான் பெற்ற திருமதி
வாழ்வில் நான் பெற்ற மிகப்பெரிய வெகுமதி

Oct 29, 2009

என் சட்டைக்குள் வந்து
சண்டையிட பிடிக்கும் அவளுக்கு
ஏனென்று கேட்டால்
நமக்கிடையே கோபம் வந்துவிடக்கூடாது என்பாள்
உன் வீட்டு தெருவை பார்த்தாலே
உனை கண்டது போல் ஆனந்தம்

உன் வீட்டுக்குள் எட்டி பார்த்தாலே
உனை தொட்டது போல் ஆனந்தம்

நீ எனை ஒருமுறை பார்த்தாலே
நீ எனக்கு கோடிமுறை முத்தமிட்ட ஆனந்தாம்

Sep 22, 2009

மங்கை அவள் மாமன் தோள் சாய
மன்னன் எந்தன் ஏக்கம் சாக
கன்னி அவள் காதல் கூட - அவள்
கண்ணீர் மார்பில் சுட
கவலைகலைய முத்தமிட
கள்ளி அவள் இதழ் விரித்தால்
உன் கன்னத்தில் முத்தமிடும்
கம்மல்களை அவிழ்த்துவிடாதே - பிறகு
அவைகளும் எனை போல்
வருந்தி ஒளி மங்கிவிடும்
முத்தமிட்டு பிரிகையில்
ஒட்டிவரும் எச்சில்
சொல்லிவிடும் நம் ஆசைகளை
பிரியாதே இணைந்தே இருவென்று
அதிகாலை குளிரில்
என் மார்பகத்தே
முண்டும் உன் திருமுகம்

என் நெஞ்சின் கதகதப்பில்
உன் இதழ் விரிய கண்டு
எனை அறியாமலே உனை அணைத்தேன்
நள்ளிரவில்
உன் மூக்குத்தி
ஒளி கண்டு
விடியல் என்று
கண் விழித்து
எனக்குள் சிரித்து
உனை முத்தமிட்ட
நேரங்கள் பல
காதலியை கட்டியணைத்து
காலைப் பொழுதில்
காக்கையின் கீதம்
காதில் கேட்பது - அந்த
ஆண்டவனுக்கே கிடைக்காத வரம்
எனக்கு நாள் தவறாமல் கிடைத்தது
என்னுடலில் பாதி இடம் தர
நான் சிவன் அல்ல
நான் அவன் பாக்கத்தான் - ஆகையால்
என்னுயிரை முழுதும் தந்துவிடுகிறேன்
உனை பிரிந்து
உள்ளம் உலர்ந்து கிடக்கிறது - அதனால்
நீ ரசிக்கும்
சிரிப்பும் மறந்து போனது
உன் முகம் என்று காண்கிறேனோ
அன்றே அனைத்தும் மாறிவிடும்
காற்றாய் பிறந்திருந்தால்
உனையே வட்டமிட்டிருந்திருப்பேன் பூங்கொடி
மனிதனாய் பிறந்துவிட்டேன்
கண்காணா துரத்திலிருந்து
எழுத்து வடிவிலே
உன் முகம் காண்கிறேன்

Sep 19, 2009

என் மேல் விழும்
ஒவ்வொரு மழைத்துளியும்
உன்னிதழின் குளுமையை
நினைவுட்டுது பூங்கொடியே
ஆனால் ஒன்று
ஒவ்வொருமுறையும்
உனை விட குறைந்த
முத்தமே அவையால் இடமுடிகிறது
பூங்கொடியாள் கோபத்தில்
குணமொன்று கண்டு வியந்தேன்
கையில் கிடைத்ததை
எடுத்தெறிந்து உடைத்தாள்
கணவனாம் எனை
மறந்தும்கூட வார்த்தையில் எடுத்தெறியாமலே
வாசனைப் பொருட்களெல்லாம்
தோற்று போகும் - உன்
வியர்வை வாசத்தின் முன்
என்னவளே!
நிலவும் காற்றும்
உலவும் இந்த இரவில்
எனையும் உனையும்
பிரித்து வைத்து
சிரிக்கிறது காலம்

இதே காலம் ஒருநாள் மாறும் - அன்று
நீயும் நானும் சேரும் போது
நம் இணைப்பை பார்த்து
வருந்தட்டும் இந்த நிலவும் காற்றும்
இமை வாசலுடைத்து
விழி வழியிறங்கி
இதயத்தில் வீற்றவள் நீ

அமர்ந்த இடத்திலிருந்து
என்னொவ்வொரு அசைவையும்
ஆட்டி வைப்பவள் நீ

நான் செய்யும்
செயல்களை ரசிக்கும்
முதல் ரசிகையும் நீ
சிவனே!
உனை
கல்லேன்பார்
கண்ணில்லாதோர்
சிலையென்பார்
சிந்தனையில்லாதோர்
பொய்யென்பார்
பொருளறியாதோர்
மனம்கனிந்த கனியே
முக்கண் முதல்வா
ஞானம் அருளி
தவறை குறைப்பவனே
தாராள மனமுடையானே
ஈசனே!

உன் பாதத்தில் தொடங்கியது
என் பிறப்பு

உன் நெற்றியில் முடிவடையும்
என் வாழ்வு

உன் இதயத்தை வந்தடையும்
என் ஆன்மா
பிறவியை பிணாமாய் பயன்படுத்துவதைவிட
சாக்கடைப்புழுவாய் வாழ்வது மேல்

வந்தான் வாழ்ந்தான் போனான் என்றிருப்பதைவிட
சொன்னான் செய்தான் என்றிருப்பது மேல்

கல்வியை கலாம இருப்பதைவிட
கற்றவரிடம் தெரிவது மேல்

பெண்ணை காதலிப்பதைவிட
நட்பை காப்பது மேல்
பேசும் பேச்சும்
எழுதிய எழுத்தும்
நினைவில் இல்லாதவம்
சிறந்த ஞானி
நினைத்தை நினைத்தயிடத்தில்
செய்வது தானே சுதந்திரம்
சமுத்திரத்தில் பிறந்த யாவரும்
இன்னும் சுகந்திர காற்றை சுவாசிக்கவில்லை
இறைவா
உனை பாடப்பாட நா இனிக்கும்
உனை பழகப்பழக பண்பு வளரும்
தாலாட்டின் ஊற்று நீ
தாய்மையில் தரம் நீ
மெட்டுகளின் இனிமை நீ
நன்மகன்களை கொண்ட நீ - எல்லோருக்கும்
வளமும் வீரமும் கல்வியும் மனவமைதியும் நல்குக
இறைவா
இன்றைக்கு இரையும்
உன்னை பாடா எப்போதும் பறையும்
உன் புகழ் ஒழுக முறையும்
இம்மூன்றும் தந்தருள்வீர்
அழகிய முகமுடைய அழகனும்
அவன் கை வேலும்
இவ்வுலகின் நிகழ்வுகளை வேடிக்கை பார்கிறதோ?
ஊட்டி வளர்த்த
தாய் தந்தையை ஏசுபவனே
தீண்டத்தகாதவன்
தூங்கும் வரை துன்பம் தான்
தாங்கும் வரை தலைகனம் தான்
எங்கும் வரை ஏழை தான்
மயங்கும் வரை மனிதன் தான்
எந்த விடியலும் வீணாக விடிவதில்லை
எந்த மனிதனும் மானத்தை மறப்பதில்லை
எந்த இரவும் இறக்காமல் இருப்பதில்லை
எந்த குரங்கும் கோளில்லாமல் அடங்குவதில்லை
சொத்துக்கள் கூட கூட
சத்துக்கள் குறையும்

துன்பங்கள் கூட கூட
சொந்தங்கள் குறையும்
பட்டாடை உடுத்தி
பஞ்சு மெத்தையில் உறங்கி
பன்னீரில் நீராடினாலும்
நாய் குணம் மாறாது
நடுமனையில் திட்டி
நாலுபேர் முன் நாணப்படுத்தினாலும்
நம் வாழ்வு நாயை ஒத்தே செல்லும்
என் தமிழகத்தை வாழவைக்கும் மாக்களே!
உழவனின் உற்ற நண்பனே
நின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை
வருமானமின்றி
உம்முடைய உடலை வருத்தி உழைப்பதன்
காரணம் என்ன?
கண்ட இடங்களில் எல்லாம்
மக்கள் பணம் பறிப்பர்
நீயோ மனம் பறிக்கிறாய்.
இறைவனை இறையாய் கொள்பவனுக்கு
இவ்வுலகம் சுவைக்கும்

மனிதனை இறையாய் கொள்பவனுக்கு
இவ்வுலகம் பகைக்கும்
நானோ ஒரு காலை
என் வாழ்வோ ஒரு பாலை
எனக்கோ இல்லை வேலை
இதில் சேலைக்கு என்ன வேலை?
பொய்களை கூறுபவன்
மதியில் அழுக்குடையவன்
மெய்களை கூறுபவன்
மெய்யில் உறுதியுடையவன்
தானம் செய்பவன்
புவியை ஆளுந்திறனுடையவன்
தாழ்வை எண்ணுபவன்
தரணியில் வாழத்தகதவன்
உதடுகள் உண்மையை தடுக்கும்
உள்ளம் உணர்வை தடுக்கும்
உயர்வு உக்கத்தை வளர்க்கும்
உறவு நட்பை வளர்க்கும்
அரசு மக்களை காக்கும்
தானம் உயிரை காக்கும்

உழவர் தினம்


உம்முடைய நாள்
கழனிக்கு பச்சை ஆடை உடித்திய
உன் கைகளுக்கு நன்றி

எருதுகளை ஏர் பூட்டி
கழனியை கிழித்த
உன் கால்களுக்கு நன்றி

உன் செந்நீரை
கழனிக்கு உரமாயிட்ட
உன் வியர்வைக்கு நன்றி

சிறப்பு மிக்க
உமை பாராட்ட
எனக்கோர் வாய்ப்பளித்தமைகும் நன்றி
நானும் நீயும் சேர்ந்து
நம் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பதென்று
வாழ்வை வளர்க்க நினைத்தோம் - இன்றோ
நீ
உன் குழந்தைக்கு என் பெயரை வைத்து
நம்காதலை மட்டும் வளர்த்து வருகிறாய்

இறைவனை கண்டால் நான் கேட்பேன்




அவளை காதலித்த இன்பம்
ஏழ்பிறப்பும் தொடரவேண்டும்

அவளை பிரிந்த துன்பம்
இப்பிறப்போடு அழியவேண்டும்
எத்தனையோ இரவு சேர்த்து வைத்த
கற்பனை எல்லாம் இடித்துவிட்டு
இயல்பாய் போகும் பதுமையே! - நீ
மனதினுள் அடியெடுத்து வைத்தப்போது
மரணவேதனை தருவாயென்று எண்ணவில்லை
நித்தம் நித்தம்
மணநாளை எதிபார்த்து காத்திருந்தவனுக்கு
மனமொன்று இருப்பதை மறந்து
உடைத்தெறிந்து போனாயே
நீ உண்மையாகவே காதலித்தாயா?
காதலுக்கு மனம் தான் அஸ்திவாரமென்பார்களே!
எனக்கு சூரியோதயம்
நீ என் வீட்டை கடந்து
பள்ளிக்கு செல்லும் வேலை

எனக்கு சூரியஷ்தமனம்
நீ என் வீட்டை கடந்து
உன் வீட்டுக்கு நீ சென்றடயும் வேலை

எனக்கு சந்துரோதயம்
நீ என் வீட்டை கடந்து
டியூசன் செல்லும் வேலை

எனக்கு சந்திராஷ்டமனம்
நீ என் வீட்டை கடந்து
உன் வீட்டுக்கு நீ சென்றடயும் வேலை

என் அஷ்தமனங்கள் எல்லாம்
நீ என் வீட்டை கடந்து
உன் வீட்டுக்கு செல்லும் பொழுது தான்
நானென்ன
உன் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடியா ?
எனை கண்டது
வெக்கி தலைகுனிந்து
கள்ளூறும் இதழ் மலர்கிறாயே!
காற்று புகா இடங்களில் கூட - உன்
கண் பார்வை துலவி விடும்
எனை காணாத போது
பொன்னெடுத்து வந்தேன்
உன் நிறத்திற்கு ஒப்பிட
அது மங்க கண்டு
கடலில் மூழ்கி
முத்தெடுத்து வந்தேன்
உன் பற்களுக்கு ஒப்பிட
அது சிதற கண்டு
ஆகாயம் சென்று
மேகமெடுத்து வந்தேன்
உன் மென்மைக்கு ஒப்பிட
அது கடிதாக கண்டு
கானகம் சென்று
மலரெடுத்து வந்தேன்
உன் கண்களுக்கு ஒப்பிட
அது வாட கண்டு
உதவிக்கு உனை அழைத்தேன் - உனக்கு
ஒப்பான அழகை தேட
ஒப்பற்ற அழகி நீயென புரியாமல்
உன் பின்னே
நான் வருவதை
கேலி பேசும் கூட்டத்திற்கு
என்ன தெரியும்?
உன் மேல் பட்ட காற்று
என் மேனி தொடுகையில்
நான் அடையும் சுகத்தை...
என் விழிப்பார்வை உரசலில் தேய்ந்த
என் வீட்டு சன்னல் கம்பி சொல்லும்
என் காத்திருப்பு எப்படியென்று
பச்சை நிறம்
பூணியவை எல்லாம்
மா மரங்கள் அல்ல

அன்பு காட்டும்
உயிர்களின் பாசமெல்லாம்
இறுதிவரை இருப்பது இல்லை
உன் வெட்கத்தை காண
என் அழகே! என்ற வார்த்தை போதும்
கன்னங்கள் சிவப்பதும்
சிறு புன்னகையில் பற்கள் இதழ் கௌவுவதும்
கண்கள் சிறுத்து நிலம் நோக்குவதும்
விரல்கள் மடங்கி உள்ளங்கையோடு உறவாடுவதும்
இதனோடு இணையும் கொலுசொலி போதும்
உனை சுற்றி எண்ணங்கள் சுற்ற
சத்தியம் காத்திட வேண்டும்
சரித்திரம் படைத்திட வேண்டும்
சர்வ-வல்லமை தந்திடு ஈசனே!

உண்மை எதுவென்று அறிந்திட வேண்டும்
உரத்த குரலில் மொழிந்திட வேண்டும்
உலகம் மாறிட வழிகாட்டிடு ஈசனே!
சேரனிடம் வில் வாங்கி
பாண்டியனிடம் மீன் வாங்கி
சோழனிடம் புலி வாங்கி
கண்களில் மூவேந்தனையும்
ஒன்று சேர ஏவி
போர் தொடுக்கிறாளடா
காந்தமென இழுக்கிறாளடா
காதல் கொள்ள அழைக்கிறாளடா
மலர் மணத்தோடு பார்க்கிறாளடா - அதில்
வண்டாய் மயங்கி போனேனடா
கடந்த பொழுதுகளை கடைந்து
கையில் கனி எடுத்து
எதிர் வரும் காலத்தில்
எட்டி கை நீட்டி
பிறருக்கு அக்கனியை ஈ
அவள் சேலை முந்தானை
என் நெற்றி வியர்வை துடைக்கையில்
அவள் மூச்சுக் காற்று
என் மார்பை தொட
தென்றலை விட மென்மையை
உணர்ந்த மனம்
என் கைகளுக்கு ஆணையிட்டது
அவளை இறுக அணையென்று
கோபத்தின் சிரிப்பு தான்
பகைவரின் அழுகையோ?
கோபத்தின் அழுகை தான்
பகைவரின் சிரிப்போ?
கோபத்தின் காமம் தான்
பகைவரை பற்றிய புறங்கூறலோ?
ஆடை அவிழ்ந்து
அங்கம் பொன்னாய் மின்ன
அவதரித்த அழகி நீ

அழகை பருக
அங்கம் மீது தவள
அவதரித்த தலைவன் நான்

முழுநிலவின் ஒளி
நமக்கு துணை இருக்க
முத்தமிட்டு முத்தமிட்டு
காமம் வழி காதல் கொள்வோம்
எனை சுற்றி சுழலும் காற்றாய் நீ இருக்க
மூச்சுக்காற்றை பற்றி கவலை இல்லை
தாய் மனம் குளிர
தந்தை உள்ளம் மகிழ
செங்கை காற்றோடு கதை பேச
பொக்கை வாய் சிரிப்பில்
அனைவரையும் காதல் கொள்ள செய்து
சிவந்த கன்னத்தில்
முத்தம் வாங்கிய நாளோ இது!
என்னை யாரென்று அறியாத போது
உன்னை யாரென்று வோயந்தேன்
என்னை யாரென்று புரிந்த போது
உன்னை யாரோவென்று கொண்டேன்
ஈசனே!
செல்லரித்து போகும்
உடல் மீது
புல்லரிக்க செய்வாய்
புதைய போகும்
உண்மை பலவற்றை
உலவவிட்டு சிரிப்பாய்
மல்லிகை பஞ்சனை காத்திருக்கிறது
தாமரை முகத்தாள் உனக்காக
சந்தனம் மணக்கும் கனவுகளும் காத்திருக்கிறது
நல்லுறக்கம் நீ கொள்ள வேண்டுமென்று
சூழ்ச்சி பல
சூழ்ந்து நின்றால்
சுழலும் புயலாக
சுழன்று பகையறுப்போம்
தமிழர் தம் உணர்வெல்லாம் மாண்டனவோ
தன்மானமிழந்து அலைகின்றனரோ
பெருவாழ்வு பெறவெண்ணி
பெருமை இழந்தனரோ
பிச்சை பெற்று புசிப்பதை வாழ்வென்றனரோ
பேடித்தன்மையை வீரமென கொண்டனரோ
நம் வீர தமிழர்கள்
விதி வழியென்று மதி இழந்து
விண்ணோடு உறவு கொண்டு போனாயோ
நேரம் தவறாது நிதானம் தவறினாயோ
மணவாசனை மறையாது மண்வாசனை கொண்டாயோ
இருப்பது ஒருயிரென்று மறந்து நின்னையே மாய்த்தாயோ
நொடிப்பொழுதில் நாடியிழந்து மரணக்குழி பூண்டாயோ
ஆசைகள் கனவுகள் பல தாங்கிய
உன் உள்ளம்
ஒரு பெருத்த சோகத்தை தாங்க மறந்ததேனோ
எய்த ஈட்டி நெஞ்சில் நிற்க
வீறு கொண்ட நடையில்
பகைவரை விரட்டும் வீரனாய்
சாமரம் வீசி நிற்கும்
சதிகளுக்கு சங்கு ஊதுவோம்
ஆதாரம் கொண்ட உண்மைகள்
வரலாறாக மாறும்
ஆதாரமற்ற உண்மைகள்
கதைகளாக மாறும்
எங்களினம் (தமிழினம்) இப்படியாக
கதையாக போனது
நிம்மதி மாறும் போது
நிதானம் தடுமாறும்
நித்திரையும் இடம் மாறும் - ஆகவே
நிம்மதியே யாரையும் பிரியாதே
பெண்களின் முந்தானைக்கு தெரியும்
சோக கண்ணீர் எது?
சந்தோஷ கண்ணீர் எது? வென்று
வேல்விழி கொண்டு வருடுவாள்
மலர்விழி கொண்டு எறிவாள்
அவளின் சிறப்பே
கண்களால் வலி தெரிய அடிப்பதே!
யெங்கண்ணுல என்ன சொக்கு பொடியா இருக்கு
இப்டி சொக்கி சொக்கி வரியே மாமா
சொக்கத்தங்கம் நாஒனக்கு தான மாமா
யெங்கண்ணு ரெண்டும் புண்ணியம் பண்ணிருக்கு மாமா
கடவுளா ஒன பாத்ததால
கெண்டங்கால் தெரிய
கந்தாங்கி சேல கட்டி
கலயத்துல கஞ்சி நெரப்பி
வரப்பு வழி நீ நடந்தாலே
தல குனிஞ்ச கதிர் எல்லாம்
தல தூக்கி உன்ன பாக்குண்டி
உன் காலோடு உரசி மோகம் கொள்ளுண்டி
நாந்தான் உன் புருசெனு
தெரிஞ்ச கதிர் எல்லாம்
என் கைய அறுக்குண்டி
அதனால வரும் போது
கதிர எல்லாம் கண்ணால
கண்டிச்சுட்டு வாடி
நா ஒன் கண்ணுக்கு அடிங்கின மாதிரி
அதுகளும் அடுங்குண்டி
வண்டி கட்டி
சந்தைக்கு போனேன்டி
மல்லி வாங்கி
மஞ்சத்துல உன அலங்கரிக்கலாமுனு
சந்தையில மை டப்பாவ பாத்தேன்டி
வந்த வேல மறந்து போய்
ஒன் கண்ணழக நெனச்சபடி
ஒரு இடத்துல நின்னேன்டி
மழை வந்து என எழுப்பி சொன்னுச்சு
சந்த முடிஞ்சு போச்சு
ராவும் ஆகி போச்சுன்னு...
மேலிமை எம்பி வளைந்திருக்க
கீழிமை தணிந்து வளைந்திருக்க
புடைத்து நிற்கும் கண்கள்
புலன்களை எல்லாம் திறக்கிறதே
நீ என்ன சுவை தந்தாய் நாவே
கற்கண்டினும் இனிய சுவைதனை
அவளின் கண்களில் சுவைத்தேன்
ராஜநாகம் சிந்திய
ராஜவைரமே அவளின் கண்கள்
எவர் வருவார்
யார் போவாரென்று
யாருக்கும் தெரியாத வாழ்வு
வருவோரெல்லாம் நிலைப்பதுவுமில்லை
போனோரெல்லாம் அழிந்ததுமில்லை - இதில்
நட்பு கூட பகையாகும்
பகை கூட நட்பாகும்
நினைப்பதெல்லாம் நிறைவேறுவதில்லை
நிறைவேறியதெல்லாம் நினைத்தவையில்லை
உயிர் போனாலும் நிம்மதி தான்
உறவென உனை கொண்ட பின்
நான் உன் இதழை சுவைக்கையில்
கண்களை மூடிக்கொள்
ஒரு நேரத்தில்
இரண்டு போதையை
என்னால் உட்கொள்ள முடியாது
உயிரை இரண்டாக பிரித்து
இமையாக பிறக்க ஆசை - எப்போதும்
உன் கண்ணை ஒட்டிக் கொண்டிருக்க
சீதை உன் கண்ணை பெற்றிருந்தால்
இராமன் தீக்குளிக்க சொல்லியிருக்கமாட்டான்
மாலை சாய்ந்ததும்
நீ தூங்கிவிடு
இல்லையேல்
பொழுது அதற்குள் புலர்ந்ததென்று
சேவல் கூவிவிடும்
(காதலி காதலனிடம்)

பூ பூத்திருந்தால்
அழகென்பாயே

உன் வருகையை
தாமதப்படுத்தி
என் கண்களை
பூக்க வைத்து
ரசிக்கின்றாயோ ?
உன் கண்களில்லிருந்து வரும்
கண்ணீருக்கு தான்
எத்தனை சுவை
ஆனந்தத்தில் இனிக்கிறது
கோபத்தில் கசக்கிறது
சோகத்தில் உவர்க்கிறது
கருப்பு
ஒளி வாங்கும்
என்றுரைக்கும் விஞ்ஞானத்தை
பொய்யென்று எடுத்துக்காட்டுவது
ஒளி வீசும்
உன் கரு விழிகள்
காமனே வந்தாலும்
கட்டப்பட்டு நிற்கும்
விழி கொண்டவள்
நீ
கண்களில் தொடக்கி
இதயத்தில் முடிவது
காதல்
பல பேர் சொல்ல கேட்டிருக்கோம்

உன் கண்களில் தொடக்கிய
என் கற்பனைகள்
உன் கண்மை தொட்டே
அது வடிவம் பெறும்
முந்தி விரித்து
முழுநிலவு காட்டி
சோறூட்டி பசியாற்றுவாள்
என் தாய்

அன்னமேதும் பரிமாறாமலே
இரு கருநிலவு காட்டி
பசியாற்றுவாய் நீ
(காதலி தன் காதலனிடம் கூறல்)


என் கருவிழிக்குள்
உன் இருவிழி
சேர்ந்ததால் தான்
இந்த கவர்ச்சி
நம் கண்களுக்கு
நங்கை உந்தன் கண்களில்
நானில மங்கையரெல்லாம்
பொறாமை கொள்வார்
தன் காதலர்க்கு கண்கட்டி விடுவார்
உன் கண்ணை கண்டால்
தனை மறந்துபோவாரென்ற பயத்தில்
ஈசனின் நெற்றி பார்வையில்
சிந்திய இருதுளி கனலோ
அவள் கண்கள்

வார்த்தெடுத்த பார்வையில்
எனை ஈர்த்து போனாள்

கண்பட்டால் பாவம் போகுமென்பாரே
அது அவள் கண்கள் தானோ
வாய்மொழியற்ற நேரத்தில்
அழகியவள் கண்மொழி போதும்

அவள் கண்ணழகு சொல்லும்
அவள் மேனி வளங்களை

இரவு படுக்கையில்
விடிவெள்ளியாய் அவள் கண்மின்ன
கிறங்கி போன அணுக்களெல்லாம்
தவம் கிடக்கும் சேர்க்கைக்கு
காவியம் காணாத கண்களடி
காளையர் கொஞ்சும் கண்களடி
கன்னியர் கெஞ்சும் கண்களடி
கள்ளினும் இனியபோதை தருமடி
அவள் கண் மேல்
அவள் உடலுக்கு தான்
எவ்வளவு ஆசை
அந்த அழகிய விழிகளை
எப்போது தழுவிநிற்கும் இமை
அந்த காவிய விழியோடு
உறவாட கண்ணோரம்காத்திருக்கும் தலைமயிர்
அவள் கண்களை காணாத போதும்
விழிநீரில் கண்ணழகு காணும் கன்னம்
கண்ணீரை துடைக்கும் சாக்கில்
விழிகளை கண்டு செல்லும் விரல்
பெண்ணுக்கு அழகு
பொட்டிட்டு இருப்பதாம் - என்னவளின்
பொட்டிற்கு அழகு
அவள் இருகண்களுக்கு
மத்தியில் இருப்பதால்
மாமன் மயங்கும்
மல்லியை கண்ணாய் கொண்டதால்
ஆசை வளர்த்து
இறைவனிடம் கேட்பேன்
இவளின் மூன்றாம் கண்ணின்
அழகையும் காண வேண்டுமென்று
இறைவா ஆணையிடு
இவளின் கண் ஈரமாய் இருவென்று
இமை உறவாடாத போதும் - நான்
இந்த அழகோடு உறவாடி கிடக்க
கண்களில் கருணை சிந்த
கருவறை கருமை எடுத்து
கன்னியவள் கருவிழி கொண்டதாலோ
வம்பு செய்யும் விழியால்
அம்பு எடுத்து எறிகிறாள்
கன்னி தமிழின்
கருவறை வழிவந்தவள்
கவிமகுடம் சூடி
கன்னியர்தம் பெருமை கூட்டுபவள்
நீ எனை
கண்கொண்டு கொண்டதால்
அந்த கண்ணொளியில்
நான் கொல்லலானேன்
காற்றில் கயிறு திரித்து
எனை கட்டி சென்றது
உனது கண்கள்
உன் மூக்குத்தி
உன் மேல் கோபம் கொள்ளும்
நீ
ஒரு கண்ணை மட்டும்
அதற்கு காட்டுவதால்
குளம்தனில் கயல் துள்ளிடும்
காதலிலே கயல் அள்ளிடும்
காயம் தனை ஆற்றிடும்
கனவுகளை என்னுள் தந்திடும்
கட்டியணைக்காமலே காமந்தனை சொல்லிடும்
அழகியவள் கண்
சிறப்பு உனக்கு தெரியுமா
உளியே!
நீயாவது கல்லை சிலை ஆக்குவாய்
என்னவளின் கண்ணோ
என்னையே எனக்களித்தது
காதல் கொடுத்த காயத்தால்
காயம் கடிந்து அலைகிறாயோ
உண்மைஉறவு பிரிவின் வருத்தத்தில்
உணர்ச்சி கொண்டு வாழ்வழிக்கிறாயோ
வருவோர்போவோர் ஆயிரமுண்டு வாழ்வில்
வருவோருக்கு உன்வாழ்வில் வசந்தமில்லையோ
மண்ணிலென்ன வாழ்வு வாழ்கிறாய் - உன்
மனதைநீயே புண்படுத்தும்வாழ்வு வாழ்கிறாயோ
மனம் என்ன தூக்குகயிறா
மயங்கியசோகங்களின் சுமையில் வாழ்வொழிய
மூடர்களே!
மூடத்தனத்தின் முழுவுருவு நீங்களே
கண்னற்றவரை உற்று பாருங்கள்
காண்பதெல்லாம் இருளென்றிருக்க சிரிக்கவில்லையா
உன்காயத்திற்கு நீயேமருந்திட முடியவில்லையெனில்
உற்றபிறர் காயத்திற்குமருந்தென எவ்வாறிருப்பீர்
வார்த்தைகளில் வாழ்க்கை நடத்தி
வடுவின் வடிவம் அறியாதவரே
காயம் ஆரும் வடுமாறாதென்பீர் - ஆரவிடாது
காயத்தை புண்படுத்தி கத்துவீர்
பார்ப்போர் பிறரைகடிக்க ஆறுதல்கொள்வீர்
பாவம் ஓரிடம் பழியோரிடமா ?
எத்தனையோ இன்பமிருக்க
ஒருசில துன்பங்களுக்காக வருந்தாதே
எசத்தில் முறுக்கிருக்க
நாடியிழந்த பிணமாக கிடக்காதே
அழகியவள் கொண்ட காதல்
அழிவுருமென்று ஐயம் கொண்டாளோ!
உலவித் திரியும் காற்றே
உதவியென எனக்கொன்று செய்
தோழியாய் அவள்மேனி தடவி
தோற்காது உன்காத லென்றுரைத்து
காதலன் யான் உரைப்பதை
காதில் நயம்பட தெரிவி
ஒருநாள் பூமிசுற்ற மறந்தாலும்
ஒருநாளும் மனமுனைசுற்ற மறப்பதில்லையடி
பாதாளசிறையில் அடைபட்டு அடிபட்டாலும்
பாவையுன் பவளமுகம் மறப்பதில்லையடி
நஞ்சுண்டு நீலநிறம் பெற்றாலும்
நங்கையுன் நற்குணமும் மறப்பதில்லையடி
நாச்சியே!
நானழியும் நிலை வந்தாலும்
நீகொண்ட காதல் அழியாதடி
நீயே இப்பச்சியின் நீடமடி
இதழ் விரித்த மலர்முகத்தோடு
இடையொடித்து வளைந்து நின்றாள்
இதுவரை பற்றிபடராத காதலை - என்மேல்
இறுகபற்றி படர்ந்து அணைத்தாள்
இவளும் ஒருவகை பூங்கோடிதானே!
பொன்மஞ்சள் நிற நிலவே
பொங்கடியும் மயங்கி கிடக்குமடி
உன்மடி தனில் தலைவைத்து
உண்ணாமல் உண்முகள் பார்த்து
விழிகொண்டு நீ பார்த்துவிட்டால்
ஆழிவித்து கொணர்ந்தார் போல்
துள்ளிக் குதித்து ஆனந்தத்தில் - உன்
தாள் தனில் முத்தமிடுமடி
மஞ்சள் நீராடி
புருவ மத்தியில் - சிறிய
வட்டமாய் திலகமிட்டு
மயக்கும் கண்களுக்கு
மெருகூட்ட மையிட்டு
பின்னிய குந்தலில் - ஒரு
முழம் மல்லி சூடி
மூங்கில் கைகளில் - ஐந்தாறு
கண்ணாடி வளையலிட்டு
வாழைத்தண்டு கால்களில் - ஆயிரம்
முத்திட்ட கொலுசணிந்து
காதோடு கதை பேசி
ஆடும் கம்மலணிந்து
மூக்கில் முத்தமிடும்
மூக்குத்தியணிந்து முகம் ஒளிர
கரு மென்நிற சேர்வையில்
தாவணி உடுத்தி
கொலுசு கீதம் பாட
சிற்றிடை ஆடி நடந்து வர
மெல்லிய சிரிப்புக்கு
தாளம் போட்டு கைவளையிணைந்து வர
காற்றில் பறக்கும் தாவணியை
கையணைத்து முன் கொசவத்தில் சொருக
கனவு கலைந்தது
கண் விழித்து பார்த்தால்
ஏதோ புது நாகரீகமாம்
கனவோடு போனாள் என் தமிழச்சி
அவன் என்பால்
கொண்ட காதலை
கேளடி தோழி !

கண்டால் கொத்தும் பாம்பென
ஆயிரம் பேர் வீதியெங்கும் காத்திருப்பார்
உற்றுப் பார்த்து
எட்டு வைக்கும் கள்வனை போல்
வீட்டு வாசற்படி வரை
யாரும் அறியாத வழித்துணையாய்
வழிப்போக்கன் போல் வருவானடி

சூரியன் மறைய
சந்திரன் ஒளி வீசுவது போல்
விழி திறந்திருந்தால் முன் நிற்பான்
மூடிய விழியானால் சிந்தையில் நிற்பானடி

இரைச்சல் நிறைந்த இந்த உலகில்
மௌனமான என் தாக ஓசை கேட்டு
தாகம் தணித்து வியப்பூட்டுவானடி

ஒன்றும் அறியாத பாலகனை போல்
பாசாங்கு செய்வது அறிந்தும்
அவன்பால் ஈர்ப்பு கூடுதடி
இரந்து உண்டு வாழ்வதை விட
இரை பையை அறுத்து விடு

குறை கூறி குற்றம் பார்ப்பதை விட
நிறை பார்த்து நிம்மதி பெற்று விடு

கொச்சை புத்தி கொண்டு அலைவதை விட
கொள்கை குணத்தோடு அமலனாகி விடு

தங்கலர் என்றொருவரை பெறுவதை விட
தரம் பார்த்து பழகி விடு

பொய் கூறி நாணி வாழ்வதை விட
மெய்யுரைத்து வீரமரணம் அடைந்து விடு

சிறந்து நீ வாழ கற்பதை விட
சிறிது ஊர் வாழ கற்று விடு
ஒளி வீசும் கண்ணுடையாள்
அளிக்கும் காதல் கொண்டுற்றாள் - அவள்
கண்ணுற்று பார்த்த
காளை யான்
இதழ் விரித்து சிரிக்கும் முன் - கண்டதும்
இதயவிதழ் விரியச் செய்தாள்
ஓர விழி
ஓவியமாய் எனை தாக்கினாள்
உறங்கி கிடந்த அணுக்களெல்லாம்
உயிருற்று உடலெங்கும் உலவச் செய்தாள்
உயிர் பெற்ற அணுக்களெல்லாம் - அவளை
உதவிக்கு கண்விழியால் அழைத்தன
மனதில்
எனக்கு பிடித்த
பிரபலங்களின் பெயர் மாறவில்லை
என்னவளென்று சொன்ன பெயர்களைத் தவிர

அப்பன் போட்ட கடுதாசி


நல்லாருக்கியா சாமி
நானும் உங்காத்தாளும் ஒன் ஞாபகமா
ஊருல வலம் வரோமையா
கைகாலெல்லாம் சொகமா இருக்குதாயா
வேலவேலைக்கு கஞ்சி குடுச்சுரியா
சாகடிக்கிற வெயிலடிக்குதுனு சேதி கேட்டேன்
வெயில்ல ரொம்ப அலையாதையா

நீ மொத தடவ அனுப்புன பணத்த
மடில கட்டிட்டு ஊர் முழுக்க
எம்புள்ள எம்புள்ளனு ஒன வித்துப்புட்டா உங்காத்தா

ஏழெட்டு மாசம் போக
உங்காத்தா என பாத்து கேட்டா
' முப்பதுக்கு முந்நூறு வாங்கி
அவன படிக்க வச்சியே
இப்டி முந்நூறு மயிலு தள்ளியிருந்து
பணம் அனுப்பவா?
இதுக்கு எம்புள்ள படிக்காம இருந்துருந்தா
எம்பக்கத்திலேயே இருந்துருப்பான்'-னு
காதுல கேட்டதும் ஆடிப்போயிட்டேன் சாமி

ஊருபக்கமே வராம
காசு மட்டும் அனுப்பிட்டே இருக்கேல
அதன் உங்காத்தாளுக்கு
ஒன் உருவம் கண்ண குத்திருச்சு போல

பக்கத்து வீட்டு பரமசிவம் இறந்ததுக்கு
அவென் புள்ள தந்தி அனுப்சானாம்
பொணத்த ரெண்டு நாள் வச்சுருக்க சொல்லி
வேல முடிஞ்சு வந்துறேன்னு

பரமசிவம் சொன்னது சரியா போச்சு
'கல்யாணம் காதுகுத்துனா ஞாயித்துக்கெழம வச்சாத்தான்
எம்புள்ள வருவேன்னு சொல்லுவான்
சாகுற காலத்துல எம்புள்ள பக்கத்துல இல்லையே
ஞாயித்துக்கெழமையா பாத்து எனக்கு சாவு வரணும்னு
அந்த ஈசன வேண்டிட்டு இருக்கேன்'- னு
அவென் பயந்தது சரியா போச்சையா

வேல வேலைனு நீயும் சுத்திட்டே இருக்க
எனக்கும் இந்த மாதிரி சாவு வந்துருமோனு
பயமா இருக்குதியா
வேல போனா போகுது
இங்க வந்துரியா
கூழோ கஞ்சியோ வெவசாயம்
பாத்து சேந்து குடிச்சுக்கலாமியா

சாகப்போற காலத்துல
எங்க நெஞ்சுல இருக்க ஆச இதுதாயா
நீ எங்க கூட இருக்கணும்னு
உங்காத்தாளுக்கு சொன்ன தைரியமும்
இப்ப என்கிட்ட இல்லையா

வயசாகி போச்சுல
அதன் புத்தி மங்கி போயி
ஏதேதோ சொல்லிப்புட்டேன்
கவலைப்படாம நீ வேல பாருயா
உங்காத்தாள நா தேத்திக்கிறேன்
அடுத்த கடுதாசி கொஞ்ச நாள் கழுச்சு போடுறேன்
பகுத்து பார்த்து
அறிவு சொன்ன
பெரியாரும் தோற்பானடி
உன் பருவமெதுவென்று

அணையா தமிழுணர்வு
மனதில் ஏற்றிய
பேரறிஞனும் தோற்பானடி
உன் தமிழைக்கண்டு

சொல்லை பிரித்து
கரு சொல்லும்
கலைஞரும் தோற்பானடி
உன் மௌனமொழியில்

தென்றல் உனை தீண்ட
இசைஞானியும் தோற்பானடி- நீ
தோல்கருவியா நரம்புக்கருவியாவென்று

மனதிலக பாடும்
கானக்குரலனும் தோற்பானடி
உன் மூச்சுக்குரலில்

செய்கையில் புதுமை செய்யும்
ரஜினியும் தோற்பானடி
உன் கண் சமிஞையில்

எனக்கு பிடித்த
அத்தனை பேரும்
உன்னிடம் தோற்றனர்
நான் உனை அடைந்து மகிழ்ந்திடவே
கவலை கொண்டு
கண்ணீர் வருமென்று
காலமறிந்து வருவான்
என் காதலன்

எழும்பிய நீர்
வழியும் முன்
முத்தொத்தடத்தால் காயவைப்பான்
என் காதலன்

என்னருகில் அவனிருந்திட
இந்த முத்தம்
எப்பொழுதும் கிடைத்திட - எனக்கு
கவலை கொண்டு வா தோழி
இந்த கவலைகளாலே
மனநிறைவு பெறுகிறேனடி
பிரிந்து போனோரையும்
பிரித்து வைத்தவரையும்
நீங்கள் விமர்சிக்காதீர்
அவர்களின் விதியை
உங்கள் கையால்
எழுத விரும்பாதீர்
போனது போகட்டும்
இருக்கின்ற இளமையில்
இளந்தென்றல் வீசட்டும்
இன்னல் மறப்பீர் - வாழ்வில்
இனிமை பெறுவீர்
கடன் பெற்றால் தான்
வாழ்வென்ற நிலையிருக்க
வங்கிகள் வாசற்க்கதவடைத்து
கை நீட்டி காட்டுது கந்துவட்டிக்காரனை
அவனிடம் வாங்கிய பணம்
வீடு வந்து சேரும் முன்
வட்டியாய் அவனிடமே
சென்று சேர்ந்தது
ஐந்நூறு வாங்கிய இடத்தில்
ஐயாயிரம் செலுத்தியும்
அசல் தீரவில்லையாம்
மானமிழக்கும் வார்த்தை வாங்கி
அசல் என்று கழியுமென்று
ஊசல் ஆடுகிறது உயிர்
கருணை உள்ளம் கொண்டு
பார்த்த கைமாத்துக்கள் காலாவதியாகிப்போனது
இங்கு பணம்
கொடுப்பவனிடம் குறைவதுமில்லை
வாங்குபவனிடம் நிறைவதுமில்லை
உச்சம் தொட்ட போது
மிச்சமாய் இருந்த வியர்வை
இச்சந்தீர படர்ந்திருந்த உடலை
முத்தமிட்ட போது தெரிந்தது - இவள்
தேகமும் தேன் சிந்துமென்று
உண்மையறியா
வளர்ச்சியடைந்த குரங்கு
சண்டையிட்டுக் கொள்கிறது
எனது கடவுள் பெரிதென

மனமே கோயில்
அன்பே கடவுள்
எல்லா மதமும் சொல்லுவதிது - ஆனால்
கோயிலில் வெறுப்பை வளர்த்து
கடவுளை கொலை செய்யும்
குணமிழந்த மந்திகளே!
நீங்கள் பக்திமான்களா?
நீங்களெல்லாம்
மதத்தின் பொருளறிந்து திருந்துவதென்று
அழிவுறும் மொழியல்ல
மூலமறிய முடியா
ஈசன் தந்த மொழி
புகழ் மறையா
புண்ணியம் காத்து
நிற்கும் மொழி

என் கவிதைகள்


எனக்கு தெரிந்த
ஒரு சில சொற்களை
பலவாறு மாற்றியமைத்தேன்
என் எண்ணத்திற்கேற்ப
வெற்றி பறிபோனதை எண்ணி
நொடிந்து ஒடிந்து படுத்துவிடாதே
உள்வேதமாம் ' வாய்ப்பிருக்கு
முயற்சி செய்' மறந்துவிடாதே
தோல்வியை மட்டும் சுவைத்தவன் சொல்கிறேன்
தோற்த்தாலும் தோகை விரித்து தோல்வியுறு
பிறரின் பாராட்டை பெறுவாய்
அது உனக்கு தோல்வியாய் தோன்றாது
வாய்மொழி சிந்தும் தேன்மொழியாளே
எனை மயக்க
மல்லிப் பூ ஏனடி
நீ சிரிக்கையில் சிறுக்கும்
உன் கண் பார்வை போதுமடி
விலை கொடுத்து எனை
மயக்க வேண்டாமடி
இடையசைத்து நீ
நடக்கையிலே மயங்கிவிட்டேனடி
வஞ்சித்தவர் வாசல் தேடி
வந்து மண்டியிடும் போது
மன்னிக்க மனம் வேண்டுமெனில்
மறக்கும் குணம் வேண்டுமடா
அப்போது தான்
மன்னிப்பு முழுமை பெறுமடா
மறவாத குணம் கொண்டு
மன்னித்தால் மன்னிப்பில் அர்த்தமில்லையடா
படிப்பினை மறந்தால்
மீண்டும் வஞ்சிக்கப்படுவாயடா
அள்ளி தலைமுடிந்த கோமகளே!
இருள் கொண்ட வானமாய் குந்தலிருக்க
ஒளி வீசும் பௌர்ணமி முகமிருக்க
மின்னும் மின்னாலாய் கண்ணிருக்க
பிடரியில் படங்திருக்கும் ஓவியமாய் மயிருருக்க
கள் ஊறி சிவந்ததாய் இதழிருக்க
கைகளின் காதலியாய் கன்னங்களிருக்க
யாருக்கு தான் கற்பனை வராது
கவிதை வடிக்க
உனை நினைக்கும் போதே
மோகம் வந்து அள்ளிக் கொள்கிறதே
நீ எனை காதலிப்பதை
ஊர் முழுக்க பறை சாற்றி
இன்புற்று இன்னல் மறந்திருந்தேன்
பின்பு தான் தெரிந்தது - உன்
காதலால் அழிக்கப்படுகிறேனென்று

Sep 18, 2009

மனிதக்காதலா? மிருகக்காதலா?


அணிவகுத்து நிற்கும்
உதாசினப்படுத்த தயார்நிலையில்
மனிதர்கள் ஒருபுறம்
உரிமைக்கான உரத்த குரலோடு
மிருகங்கள் மறுபுறம்

குறை சொல்லி பழக்கப்பட்ட
மனிதன் முதலில் ஆரம்பித்தான்
'மிருகமே! மிருகமே!
நீங்கள் செய்வது தரங்கெட்ட காதல்'
'துணையிருக்க பிறர் துணை
காணாதிருப்பது தான்
தரங்கெட்ட காதலா?' மிருகம் கேட்டது

'ஒருவனுக்கு ஒருத்தியென வாழ்கிறோம்
உங்களை போல் பார்ப்போர் மீது
பார்த்தயிடத்தில் உறவு கொள்வதில்லை' என் முடித்தான்
'எங்களை போல் வாழும்
ஆங்கிலனிடம் தான்
நீங்கள் கைநீட்டி காசு வாங்குகிறீர் - அவன்
கலாச்சாரம் இங்கு வர ஏங்குகிறீர்' என சொன்னது

வாய்மூடிப் போனான் மனிதன்
வாயில்லா பிராணி
வாய் திறக்க ஆரம்பித்தது

'எங்களின் காதலை பற்றி
உங்களுக்கென்ன தெரியும்
நீங்கள் எங்களிடம் புலம்புவது போல்
நாங்கள் உங்களிடம் புலம்பினோமா?
உங்களின் காதலை பற்றி எங்களுக்கு தெரியும்
பயங்கொள்ள வேண்டாம்
நம்பிக்கை துரோகம் செய்வது
எங்களின் வழக்கமன்று
உங்கள் காதலை உங்களை போல்
ஊரறிய இழிவு படுத்தமாட்டோம்
எங்களின் காதல் தரங்கெட்டதென
நீங்கள் மட்டும் சொல்லாதீர்'

'மனிதனே!
ஊரறிய உறவுகொள்ளும் நாங்கள்
உங்களைப்போல் உல்லாச காதல் செய்வதில்லை
நாங்கள் காதலில் காமத்தை மட்டும் காண்கிறோம்
உண்மையை சொல்ல
உங்களை போல் தயங்குவதில்லை
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்
நீங்கள் காதலில் காதலை மட்டும் காண்கிறீர்களா?'

'ஒத்துக் கொள்கிறோம்
ஒரு காலத்தில் உயர்வான காதல் செய்தீர்
அன்று எங்கள் காதல் தரங்கெட்டதே - இன்றோ
எங்களின் காதலை விட
பன்மடங்கு தரங்கெட்ட காதல் செய்கிறீர்
ஆதலால் தான் எங்கள் காதலை
தரங்கெட்டதென சொல்லாதீர் என்கிறோம்'

'மானம் பெரிதென
வாய் வார்த்தையில் சொல்லும் மனிதர்களே!
கொடிது கொடிது மனிதக்காதல் கொடிது
அதனினும் கொடிது
மனிதம் மறந்த மனிதக்காதல் கொடிது'
என சொல்லி முடித்தன
இல்லை இல்லை
என சொல்லி முடித்தனர்
மனிதர்கள் வாய்மூடிக் கிடந்தன
எத்தனை முறை பார்த்தாலும்
பற்றறுக்கும் சிவன் மீதே
பற்று கொள்ளுதே
என் காதலே
கொங்குதமிழ் பேசும் கோதையிவள்
பாரிமகளிரின் உறவோ
கண்ணில் அம்பெடுத்து எறியுமிவள்
சேரமாதேவியின் உறவோ
புலிக்கு பாலூட்டி வளர்க்குமிவள்
குந்தைபிராட்டியின் உறவோ
பொடியிடைநடையில் மீனென நீந்துமிவள்
பாண்டிமாதேவியின் உறவோ
யானை அம்பாரியில் வருமழகியிவள்
சிவகாமியின் உறவோ
உறவேதும் தெரியவில்லை
உலகம் போற்றும் தமிழ் மரபு
மாறா மங்கையை பற்றி
மாற்றம் வருமென
மரணம் வரை காத்திருக்காதே
மரணத்திற்க்குள் மாற்றத்திற்கான
ஒரு விதையாவது விட்டுச்செல் - அது
மண்ணின் ஈரத்தாலே
முட்டி துளிர் விடும் - பின்
நீருரமிட்டு காப்பர்
விருட்சத்தை வீணாக்க விரும்பாதோர்

பூமகளின் புலம்பல்


நஞ்சுண்டால் பஞ்சென பறக்கும்
உயிரை பிஞ்சுருவில் வாங்கி வந்தாய்
என் மேல் நடிப்பதற்கு
முன்னூறுநாள் சுமப்பவளை
தெய்வம் என்கிறாய்
முன்னூறு நூறு நாள்
நான் சுமப்பதை மறந்தாயோ
உறவறுத்து போகும் உறவுகள்
நீ இறந்த பின்
விட்டு போவது என்னகத்தே
உலக சுமைகளுக்கு அறிமுகப்படித்தியவளை
சாவிலும் மறவேன் என்றாய்
உன் எலும்புகளை இன்றும் நான் சுமக்கிறேன்
நீ வாழும் போது எனை மறந்தாயே
கிழக்கினில் விடிவெள்ளி முளைக்குதடா
பட்ட வேதனைக்கு வழி பிறக்குதடா
மனம் தனில் மகிழ்ச்சி ஊற்று ஊறுதடா
மெய்யென்று சொன்னதை
பொய்யென்று உரைத்தவர்
முகத்திரை கிழிந்ததடா
உண்மைக்கு உயிருண்டு - அது
இந்த உலகில் வாழ்வதும் உண்டு
தந்தைதாய்க்கு பிடிக்காதவர்கள்
நானும் என் சகாக்களும்
சகாக்களுள் கடைநிலைக்கு தள்ளப்படுவது
நான் எனும் எனது நட்பு
ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு
ஓரங்கட்டப்பட்டவன் நான்
மன ஓலங்களை காது கொடுத்து
கேட்பார் யாருமில்லை எனக்கு
பேருக்கு என்று உறவானதால்
நானும் அனாதையே
பாவங்கள் பல செய்தால்
புண்ணிய நீராடலில் பாவங்கள் அழியும்
யார் சொன்னது இது?

அந்த சிவன் சொன்னது - என்
தலை மயிர் சாரலில் நனைந்தாலும்
பாவங்களின் பலனை அனுபவிப்பாய் என்று
கருத்துக்கள் கார் ஊற்றாய் வேண்டும்
காற்றில் கலைந்து போகும் காராய் வேண்டாம்
பூமாரியாய் பொழிந்தால் நனைவர்
ஊசி மாரியாய் பொழிந்தால் நனைவார் உண்டோ?
நயம்பட பேசி புலம்பட செய்தால்
செவி புலன் திறப்பர்
துரோகம் செய்திருந்தால்
தூரத்தில் வைத்தாவது
உனை ரசித்திருப்பேன்
நம்பிக்கை மோசம் செய்ததால்
உனை பற்றிய நினைவுகளையும்
சேர்த்து துலைத்துவிட்டேன்
'நான்' அழித்து
நாணயம் கொண்டு
நாவொன்றில் நன்றி கொண்டால்
நாயகனின் அருள்
நிச்சயம் உண்டு
கிறங்கி உறங்கி எழும் நேரம்
மனக்கிழிஞ்சல்கள் தைத்தெழுந்து
விழித்து வியர்வை சிந்தும் நேரம்
வினைவலி மனதில் கொண்டு செய்தால் - அதுவே
வாழ்வின் வெற்றிக்கான சிந்து
உன்னோடு உறவாட
உயிர் துடிக்குதடி
உறவோடு விளையாட
மனம் தடுக்குதடி
பண்ணின பொருளே
பாம்பின் உறவே
பிறப்பின் அர்த்தமே
பீடையின் தீர்வே
புண்ணியத்தின் வழியே
பூவின் மணமே
பெற்ற புகழே
பேய்மனத்தின் பகையே
பைந்தமிழின் உயிரே
பொன்னின் பொன்னே
போட்டியின் முடிவே
பௌத்தத்தின் மூலமே
தந்தையின் உருவே
தாய்மையின் பொருளே
திறனின் திறவே
துன்பத்தின் துயரே
தூய்மையின் துணையே
தென்னகத்தின் இதயமே
தேனின் இனிமையே
தைரியத்தின் வீரமே
தொன்மையின் தொலைவே
தோழமையின் தோளே
சடலத்தின் உயிரே
சாவில் உறவே
சிறப்பின் சிறப்பே
சீரின் அசையே
சுயம்பு வடிவே
சூழ்ச்சியின் வினையே
செங்குருதியின் உரம்
சேர்ந்த புகழே
சைகையின் செயலே
சொர்ணத்தின் சொர்ணமே
சோர்வின் களைப்பே
சௌபாக்கியத்தின் வழியே
கருவின் உருவே
காற்றின் விசையே
கிரகங்களின் அரசே
கீதைக்கு முதன்மையே
குடியின் வித்தே
கூறுகளின் மூலமே
கெட்டுணர்வின் பகையே
கேள்வியின் விடையே
கைமாறில்லா கருணையே
கொடுப்பதின் விளைவே
கோவின் கோவே
கௌதமனின் அறிவே
அப்பனாய் நின்றவனே
ஆத்தாளாய் வந்தவனே
இருள் நீக்கி சென்றவனே
ஈகை புரிந்தவனே
உண்மையின் உருவாய் இருப்பவனே
ஊர் முழுதும் நிலைத்திருப்பவனே
எளியோருக்கு எளியோனே
ஏமாற்றங்களை அறுப்பவனே
ஐம்புலனின் நாயகனே
ஒடுங்கும் மனதின் அரசனே
ஓதும் வேதத்தின் தலைவனே
ஔடதத்தில் நிறைந்திருப்பவனே
வள்ளுவன் வாசகன் கம்பன் உட்பட
பலர் காதலித்தும் -தன்
கண்ணியம் காத்து நிற்கும் கன்னி(த்) தமிழ்
கற்பில் கண்ணகிக்கு மூத்தவள்
எவளுக்காகவும்
தாயின் சொல்லை மறக்காதேடா
எவனுக்காகவும்
தந்தையின் வார்த்தையை மீறாதேடி -இது
தந்தைதாயாகிய மூலவனின் சொல்
வாழ்வது எனில்
நீர் மணக்கும்
அவன் உள்ளத்தில் வாழ வேண்டும்
சாவது எனில்
அவனின் நெற்றிக்கண்
அனலில் சாக வேண்டும்
என் மீது
காரி உமிழ்ந்தாலும்
நீ என் காதலன்
என் பொருட்டு
கோபம் கொண்டு விலகிச்சென்றாலும்
நீ என் காதலி
வழிமாறி நடக்காமல் இருக்க
பிடித்துக்கொள்ள சிவ 'கை' உள்ளதடா
செய்த தவறு மனமுவந்து திருந்த
சிவ பாதம் உள்ளதடா
உன் திருமேனி வாசத்தில்
என் பாவங்கள் அழிந்ததைய்யா
உன் புன்சிரிப்பில்
என் திமிருகள் எரிந்ததைய்யா
உன் நெற்றிப்பார்வையில்
என் எனும் எண்ணம் சாகுதைய்யா
குருவான உருவாய்
முன் நின்று உரைத்தானடா
அடைபட்டு விடுபடு நேரமே
வாழ்க்கை என்று
மெய்ஞான சுடர்
மெய்ப்பித்த தத்துவம் இது
தவத்தின் தலைவன்
பிறைநிலா அணிந்தவன்
பாம்பை மாலையாய் கொண்டவன்
சவசம்பலில் குளிப்பவன்
உமைக்கு இடம் கொடுத்தவன்
நந்திக்கு நன்மை செய்தவன்
நான்மறைக்கும் முதலானவன்
என் சிவபெருமானே!
சீக்கிரம் எனை ஆட்கொண்டு விடு
பார்ப்பது சிவருபம்
கேட்பது சிவநாமம்
என்றிரு மனமே!
சிந்தை சீராகும்
குணமும் நேராகும்
பார்ப்பாருமில்லை கேட்பாருமில்லை என்று
ஆணவம் கொள்ளாதே மனமே
சிவலோக சித்தன் சிரிப்பான் மனமே
சிந்தை மறந்து அலையாதே மனமே
சிவ பாதம் இருப்பதை மறவாதே மனமே
உச்சி தனில் கங்கை கொண்டாய்
இடம் தனில் உமை கொண்டாய்
நெற்றி தனில் பார்வை கொண்டாய் - உன்
பாதம் தனிலாவது எனை கொண்டு கொள்ளைய்யா
ஐமுகம் கொண்ட ஐயனே!
ஒருமுகம் எனக்கழித்து
பல வேஷம் இட செய்வது ஏனோ?
வேஷம் கலைந்து
என் அகமுகத்தில்
உன் ஞானமுகம் கொடும் ஐயா
நாயகனின் நவதுவார நாதத்தில்
நான் எனும் அகந்தை அழிந்ததடா - அவன்
எனை மீட்டும் போது
அவன் பால் கொண்ட காதல் இன்னும் வளருதடா
எனை அணைக்கும் போது
அவன் மேல் நான் கொண்ட காதல் தெரிந்ததடா
எனை அரைந்த போது
என் மேல் அவன் கொண்ட காதல் புரிந்ததடா
அவன் மேனியின் திருநீற்று வாசனை - எனை
அவன் வசமே இழுக்குதடா
நடக்கும் ஓரடியும் சொந்தமில்லை
படுக்கும் ஆரடியும் சொந்தமில்லை
சுகமும் சொந்தமில்லை
சோகமும் சொந்தமில்லை
பாசமும் சொந்தமில்லை
பார்வையும் சொந்தமில்லை
சொந்தமில்லா வாழ்வில்
பந்தமாய் வந்தவனே!
அன்பே உருவான ஈசனே - உன்
தாள் பணிந்ததால்
என் தாகம் தீர்ந்ததைய்யா
இறந்த கால பொய்கள்
நிகழ்கால உண்மையாய் மாறுவதுண்டு
நிகழ்கால உண்மைகள்
எதிர்கால வரலாறாய் மாறும் - ஆக
உரைத்த பொய்கள் போதும்
சாதிக்க துடிப்பவன்
சத்தியம் கொண்டு உண்மை உரைக்கட்டும்
ஓடனும் தம்பி ஓடனும்
காலத்தின் வேகத்துக்கு ஓடனும்
கைகாலிருக்கு முளையிருக்கு உழைப்பதற்கு
உண்டு படுப்பதே பொழப்ப கொண்ட
'உருப்படாத கழுத' பெயர் மட்டும் மிஞ்சும்
உயிர்மெய் எழுத்துடன் கால் சேர்ந்தால்
மாத்திரை கூடுமாம்
இலக்கணம் தெரியாது
என்னுடன் நீ சேர்ந்தால்
வாழ்வு கூடும்
இயற்கை தெரியும்
சிந்தனையற்று சிரிக்கும்
குழந்தை வாழ்வு வேண்டுமடா
முலைதனில் முத்தமிட்ட
பால்மணம் மாறா பருவம் வேண்டுமடா
மடியில் கிடந்தது
முகம் பார்த்த காலம் வேண்டுமடா
மூச்சுமுட்ட அணைக்க செய்யும்
அந்த அழுகை வேண்டுமடா
என் ஆத்தா
மஞ்சள் தடவி திஷ்டி பொட்டு
வைத்த கால் இது
என் அப்பன்
இதழ் பதித்த தடாகம் இது
என் சோக சந்தோஷ கோபம் காட்டும்
நான்காம் கண் இது
முள் தைத்தாலும் கல் இடரினாலும்
தன் நிலை மாறாமல்
நடை போட்ட கால்கள் - இன்று
இறைவனை மறைக்கும் நந்தியாய்
நடையின் பாதங்களை மறைக்கிறது -இதுவரை
மொத்த உடலை மட்டும் தாங்கிய கால்கள்
வலியையும் சேர்த்து தாங்கட்டும்
வறண்ட போதும்
தான் வறச்சி காட்டா
வளமையின் போது
வைரமாய் மின்னும் வைகை
காதலர்கள் வசந்தகால பறவையாய் கூடும்
அழகர் மலை
கார்த்திக்கேயனின் சமத்துவம் காட்டும்
பரங்குன்ற குன்று
சமண முனிகளின் சாகசம் காட்டும்
சமண மலை
யானை வயிற்றில் அழகன் உருவெடுத்த
யானை மலை
மன்னனாய் வலம் வர தூண்டும்
நாயக்கர் மஹால்
பெண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்தும்
மீனாட்சி கோயில்
இதுதான் சிற்ப வேலை என்றுணர்த்தும்
பாண்டியன் குடைகுகை
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
ஆலவாய் நகரை பற்றி

கேளடி தோழி !
குருடருக்கும் பார்வை வருமடி
செவிடருக்கும் செவி திறக்குமடி
ஊமையருக்கும் மொழி பொழியுமடி
முடவருக்கு கால்கள் நடனமாடுமடி
இந்த நான்மாட கூடல் மாநகரிலே
"அக்கரைக்கு இக்கரை பச்சை"
என்பது முதுமொழியடி
"எக்கரையும் பச்சை "
மருதத்துக்கே உரித்த மொழியடி
காலை பனி
வயலோடு உறவாடுமடி - குத்தாமல்
ஊசியென நாசி வழியிறங்கும் குளிர்
இதனோடு உறவாட மனமேங்குமடி
உள்ளம் கவர்ந்தவர்
கண்கள் தேடும் விழாவடி
மனசிரமம் தீரும்
சித்திரை திருவிழாவடி
தேர் ஓடி விளையாடும் வீதியடி
விதி வினை தீரும் ஊரடி
இதுவே எங்கள் மதுரையடி
ஒப்புக்கு ஒட்டி நிற்கும் நண்பா
ஓயாது பேசிக்கொண்டு இருப்பது
நட்பென்று நினைத்தாயோ?
நாநிலம் சுற்றி
ஊர் புரணி பேசி
நகை கொள்வது
நட்பென்று நினைத்தாயோ?
நிந்தித்து நிந்தித்து
நிதானம் இழக்கும்
நயவஞ்சகனின் நட்பிலக்கணமடா இது
பொய்க்கதை கேட்டு
குமுறி எழுந்தது ஒரு காலம்
குமுறலில்
அழுது துடித்தது ஒரு காலம்
அழுகைக்கு
ஆருதல் தேடி அலைந்தது ஒரு காலம்
ஆருதலில்
அரவணைப்பு தேடியது ஒரு காலம்
அரவணைப்பில்
ஆனந்தம் தேடியது ஒரு காலம்
ஆனந்தத்தில்
ஆட்டம் போட்டது ஒரு காலம்
ஆட்டத்தில்
ஆணவம் கொண்டது ஒரு காலம்
ஆணவத்தில்
அறிவிழந்தது ஒரு காலம்
அறிவால்
உலகை ஆள்வது இக்காலம்
இன்றும்
உன் தாகத்துக்கு தண்ணீர் மறுத்தல்
என் உடல் கீறி செந்நீர் தருவேன்
நீ எனை மறுத்தாய்
நான் என்ன செய்ய
அதையும் நீயே சொல்லிவிடு
உனக்காக நான் செய்துவிடுகிறேன்
இருளில் மறைந்திருக்கும்
ஒளியை கொண்டு
வாழ்வை தேடு
இருள் இருள் என ஓடாதே
இதயம் துடிக்கும் வரை
தோல்வியின் வலியை மனதில் வைத்து
பயணம் செய்
வெற்றி உனதே
தல நெறய மல்லி பூ வச்சு
மாமர நிழல்ல பந்தி வச்சு
காத்துருக்குங்க வீட்ல
கைப்பிடி சோறுனாலும்
சேந்துதான் சாப்டனும்னு சத்தியம் வாங்கிருக்குங்க
அவ கைல உருண்ட உருட்டி
சாப்டுற சொகமிருக்கே
வெயில்ல வேல பாத்து
மழைல நனைரத விட சொகங்க
காத்து பலமா அடிக்குதுங்க
அவ காத்துல கரஞ்சுருவானு சொல்லலிங்க
அவ கையால சாப்டு
மடில படுத்து கொஞ்ச நேரம் கொஞ்சனுங்க
நேரம் போகுதுங்க
நா வாரீனுங்க
கற்பனையாளன் என்பதற்காக - இவன்
வாழ்வு கற்பனையாகவே இருக்கட்டும் என்று
யாரேனும் நல்லவர்கள் நினைத்துவிட்டனரோ
கல்லூரியில் படித்த
அனைத்து பாடங்களும் மறந்துவிட்டது
உன் பெயரை தவிர
உனை பார்க்க துடிக்கிறது மனசு
பார்த்தால் பழய நினைவு துன்பங்கள்
உனை துரத்தும் என்பதற்காக
மனசாட்சியை மாய்க்க செய்கிறேன்
என் ஒட்டு மொத்த
உயிரையும் எடுத்து - அவள்
பெயர் எழுதத்தான் நினைக்கிறேன் - ஆனால்
அவள் என்னிடம் சொன்ன
ஆசைகளை பூர்த்தி செய்வதற்கும்
தூர தொலைவில் என்றாவது
காண்பேன் என்ற நன்ம்பிக்கையில் - கொஞ்ச
உயிரை மிச்சம் வைத்திருக்கிறேன்
நான் காதலிக்கும் முறை தவறா?
பொய் சொல்வது பிடிக்காது என்றாள்
பொய் சொல்வதை விட்டேன்
மது வேண்டாம் என்றாள்
கோப்பையை உடைத்து எறிந்தேன்
பெண்களுடன் நெருங்கிய பழக்கம் பிடிக்காது என்றாள்
பழக்கத்திற்கு எல்லை வரையருத்தேன் - அவளின்
பிடிக்காத பட்டியலில் இருந்த அனைத்தையும்
நான் என்னிடமிருந்து விலக்கிவைத்தேன் - நான்
செய்த பாவமோ!
என்னை பிடிக்கவில்லை விலகி செல்கிறேன் என்றாள்
அவளுக்கு பிடிக்காத என்னை
"நான் விலக்கி வைக்கிறேன் " - நான்
காதலிக்கும் முறை தவறா?
நான் ஒரு
- உயிரற்ற உடல்
- சோகங்களின் சந்தோஷம்
- நினைவுகளின் நிஜம்
- காயத்தின் கல்வெட்டு
- இழந்ததின் வாழ்க்கை
எனை விட்டு பிரிவாள் என தெரிந்திருந்தால்
ஒரு புகைப்படமாவது வாங்கி வைத்திருப்பேன்
கொடுத்த பொருளை பத்திரமாய் பார்த்திருப்பேன் - இன்றோ
அவள் தொட்டு போன பொருள்களை
தேடிக் கொண்டு இருக்கிறேன்
நடந்ததை எல்லாம் நினைக்கையில்
இதயத்துடன் சேர்ந்து உடலும் துடிக்கிறது
பிடித்திருந்த விரலை தளர்த்தியது
உன்னை கை விட அல்ல
இன்னும் நெருங்கி வா என்பதற்காக
நிலவொளியின் குளுமை
தோல்கள் தாண்டி
உள்ளம் குளிர்கையில்
மனதிலிருந்து
நிலவாய் வானில் ஏறி
கட்சி தந்து மகிழ்விக்கிறாள்
என் இல்லாள்
போதையின் பாதையில்
பல வழி தெரியுதடி
அத்தனை வழியும் உனை தான் காட்டுதடி
உனை அடைய குறுக்கு வழியும் தோன்றுதடி
பழக்கமில்லாத வழிதான் என்ற போதும்
பழக துடிக்கிற மனதிற்கு தெரியவில்லையடி
சிவன் என்று சொல்லும் போதே
சிந்தை எல்லாம் சிலிர்க்குதடா
தப்பு செய்யும் போது
சிவந்த கண் கொண்டு திருத்துபவன்டா
மனம் திருந்தும் போது
செங்கை கொண்டு அணைப்பவன்டா -என்
நடையின் கம்பீரத்தின்
நாடியாய் இருப்பவன்டா
கண்ணின் ஒளியாயிருப்பவன்டா
உடலின் உயிராயிருப்பவன்டா - இத்தகைய
சிவபெருமானே என் சிந்தை எனும்
சிவிகை ஏற வல்லவன்டா
நடந்தால் காற்றை
காயப்படுத்துவேன் என்று அமர்ந்திருந்தேன்
வழி மறிக்கிறாய் என்று கதறியது
நான் சொன்னேன்
நீயில்லாமல் நானில்லை - ஆனால்
நானில்லாமல் நீ உண்டு
எனை விட்டு கடந்து செல்லென்று
விடுவதாயில்லை மண் மூடும் வரை
நான் யார்?
கடவுள் என்பவன் யார்?
எங்கு உள்ளான்?
இவைகளுக்கு விடையளித்து
என் தனிமை

சொல்லாலும் செயலாலும்
எவருக்கும் தீங்கு விளைவிப்பதுமில்லை
எவரையும் யாசித்து வாழ்வதுமில்லை
இவைகளை அருளியது
என் தனிமை
நான் வீர மரணத்தை விரும்புகிறவன்
ஆகையால் நான்
இன்னும் உன்னை காதலிக்கிறேன்

தாசிமார்


தேகம் தெரிய உடை உடுத்தி
தேவதையாய் வந்தாள்
முகத்தில் மூவாயிரம்
தேவர்களின் ஆசீர்வாதம்
எத்தனை பேர் வளைத்தாலும்
தன் நிலைக்கு திரும்பும்
மூங்கில் போல் உடல் கொண்டவள் - அந்த
உடலுக்கு ஏத்த மார்புடையாள்
இதழ்களில் பனங்"கள்" ஊறி - என்
தாகம் தணிக்க தயங்காமல் நிற்பவள்
சிற்றிடையில் சிவந்த காமம்
கண்கள் முழுவது நிரப்பி - எனை
கட்டிலில் காதலிக்க காத்திருக்கிறாள்
மனமெல்லாம் கல் சுமக்கும் வேதனை
இருந்தும் கூட சுமப்பது - என்
காதலியாம் கண்ணகிக்கு என்கையில்
வேதனை வழி கூட
சுகமாய் தான் இருக்கிறது
ஈசன் அடிக்கும் உடுக்கையாய் இருந்தேன்
கண்ணன் இசைக்கும் குழலாய் இருந்தேன் - இன்று
நாரதரின் கை வீனையானேனோ
என் நரம்புகள்
யார் யாரையோ வாழ்த்த
ஸ்ருதி சேர்க்கிறதே
கற்பனையிலும் கறைபடிந்ததோ என்னவோ
கனவிலும் என்னவள்
முகம் வருவதில்லை
மேனி ஏங்கும் மஞ்சள்
நான் பூச
கூச்சம் தாளாமல் சிரிக்கிறாள் - இவள்
உள்ளங்கை என் மார்பு தொடுகையில்
அந்தரங்க துன்பமெல்லாம் தண்ணிராய் கரைகிறது
என் சிரிப்பு கண்டு
வெட்க மிகுதியில் சிரிக்கிறாள்
செவ்விதழ் விரித்து
எனை சிவிகையில் ஏற்றுகிறாள் - இவளை
காணாத கணங்கள்
மனம் கங்காய் கொதிக்கிறது
இவளை கண்டதும்
வேதனை எல்லாம் வெந்து ஒழிந்தது
எனை கட்டி தழுவி
தோளில் தோகை விரித்தாடும்
இளமயில் இவள்
என் மார்பும் கழுத்தும்
இவள் புரளும் பஞ்சனைகள்
வேறு யாரு
என் மகள் தரும் முத்தம்
முக்கனி சுவையையும் மிஞ்சும்
அந்த முத்த ஈரம்
என் உள்ளுர
இறங்கும் உரம்
பெண்ணாய் பிறந்து
பேயாய் அலைந்து
பூணாத பூச்சூடி
பூநாகமாய் எனை தீண்ட
புழுவாய் நான் துடிக்க
உணவாய் அவளருந்த - நான்
மயங்கிய மாயையெல்லாம் மரணமெய்தது
யோசித்து வாழ்கிறவர்கள் மத்தியில்
யாசித்து வாழ்பவரும் உண்டு
யோசிப்பவர் யாரும் யாசிப்பதில்லை
யாசிப்பவர் யாரும் யோசிப்பதில்லை
யோசித்த பொருள் வீணாய் போவதில்லை
யாசித்த பொருள் வாசனை செய்வதில்லை
யோசனை யுகத்தை பெற வழி செய்யும்
யாசனை யாக்கையை அழித்துவிடும்

பிறப்பு


தந்தை தாய் சேர்ந்து
பிடித்த பிண்டம் இது
ஆசையில் அரவணைத்த போது
அவதரித்த அவதாரம் இது
ஆசைகள் தொடங்கும் போது
அடங்கா ஆசையின் வெளிப்பாடு இது
எனக்கு பிடித்த சன்னலோர இருக்கை
நான் அமரவில்லை
எனக்கு பிடித்த அவள் அமருகிறாள்
அவளுக்கு பிடித்த
சன்னலோர இருக்கையிலும் என்னுடனும்
இருபுறமும் பூர்த்தியானாள் அவள்
பெண்ணின் இயல்பிலே
ஆசைகள் நாம் போடும் கணக்கு
நடைமுறைகள் அவன் போடும் கணக்கு
கனவுகள் தவறலாம்
அவன் கணக்கு என்றும் தவறியதில்லை
தனிமை கூட தவம் தான்
அவன் ஏட்டில்
காடு காடு வாழ்வே
அடர்ந்த காடு
தேடு தேடு அதில்
நேர்வழி தேடு
பாடு பாடு உன்னத
உண்மையை பாடு
நாடு நாடு நிஜ
நாகரிகத்தை நாடு
போடு போடு தீயில்
பொய்மைகளை போடு
கூடு கூடு அன்பில்
ஒன்றாய் கூடு
தடு தடு காம
இச்சைகளை தடு
நடு நடு நல்ல
எண்ணங்களை நடு
ஓடு ஓடு இதில்
ஓயாமல் ஓடு
படு படு மனம்
பக்குவ படு
சூடு சூடு வெற்றி
மாலையை சூடு
ஆடு ஆடு உச்ச
ஆனந்தத்தில் ஆடு
தொடு தொடு இன்பத்தின்
எல்லையை தொடு
நீ ஒளி நான் இருள்
நீ நட்சத்திரம் நான் சூரியன்
நீ மழை நான் காற்று
நீ பறவை நான் புங்கை
நீயிருந்தால் நானிருப்பதில்லை
நானிருந்தால் நீயிருப்பதில்லை - ஆனால்
இருவரும் இல்லையேல்
இந்த உலகம் இல்லை
ஆர்ப்பாட்டம் நிறைந்த வாழ்வில்
சப்தம் போட்டாவது
அமைதியை பெற்றுக்கொள்
ஆனந்தமாய் வாழ்வதற்கு - வீணாக
சங்கடப்பட்டு சாகாதே !
மலருக்கு ஏதடா கண்கள்
அவை அழுவதற்கு
அவைகள் இதழில் மட்டும்
நீர்த்துளி வைத்து
உன் மனதை ஏய்க்கிறது
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா நான்
பைந்தமிழ் புலவன் சொன்ன
நெறி தவறிய பைத்தியக்காரனடா நான்
கடவுளுக்கு காத்து வைத்து
கதை சொன்ன பைத்தியக்காரனடா நான்
பண்டை மரபுகளை
மரணக்குழியில் தள்ளிய பைத்தியக்காரனடா நான்
கற்பியல் களவியல் ஒழுக்கம்
மறந்து திரியும் பைத்தியக்காரனடா நான்
நாகரிக போர்வைக்குள்
தீராத பாவம் தேடிய பைத்தியக்காரனடா நான்
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா நான்
உன்னை தொட்ட கை
வேறொருவர் தொட வந்தால்
தொடாமல் தொட்டு போ என்கிறதே
கைக்கும் உன் வாசம் தெரிந்ததோ என்னவோ ?
என் இதழ்களுக்கும்
என் கைகளுக்கும்
என் மார்புக்கும் - நீ
புதிது அல்லவே!
ஒவ்வொரு முறையும் - நீ
புதிதாய் பூப்பது
விந்தையே!
உனை பாடி பாடி
உதட்டசைவை இழந்தேன்
உனை நினைத்து நினைத்து
சிந்தை இழந்தேன்
உனை தழுவி தழுவி
தகமனைத்தும் இழந்தேன்
உனை வணங்கி வணங்கி
வான் புகழ் எய்வது எப்போது?
உண்மையாய் உறவாடும் போது
உயிர் இணைந்த ஆனந்தத்தில் நனைந்தேன்
நீ அமைதி கொள்ளும் போது
உனக்கென்று தனி மனமிருப்பது தெரிந்தது
தவறு என்னுடையது தான்
உன் தயக்கங்களை கலையாது
இது நாள் வரை காலம் கடத்தியது
தயக்கங்களில் தவிக்கும் வாழ்க்கை
இனியும் இனிக்குமோ
உன்னிடம் நான் கண்ட
மர்மங்கள் பல
உன்னிடம் நான் காணாத
உண்மைகள் சில
ஆதாயமற்ற உன் ஆராதனையில்
அன்னையின் பாசம் மறந்தேன்
கபடமற்ற உன் செவ்விதழின் அசைவில்
சிந்தும் இலக்கியத்தை பருகினேன்
மெய் மறைத்து மெய் வளர்த்த எனை
ஆடையின்றி அவதரித்து அள்ளி சென்றதேனோ
இறைவா!
இன்பத்தின் ஏணியாய் தெரிகிறதே
இறுக தழுவுகையில்
இருக்கின்ற இன்னலெல்லாம் கரைகிறதே
இயல்பை கடந்த
எதார்த்தம் இது தானோ
அறியாத பருவத்தில்
உருகாத மனமும் உருகும்
உனை நினைத்தால் என்பர்
விளையாட்டின் வேடிக்கை போல் சிரித்தேன்
புரியாத பல நடக்கையில்
செய்த வினையே என்று உணரும் போது - நீ
உருவற்று அவதரித்து சிரிக்கையில்
என் ஆணவமெல்லாம் செத்தொழிந்ததைய்யா
சித்தம் பித்தமேறும் இன்பம்
அம்மை அப்பன் வடிவே
உனை தவிர ஒருவரையும்
இனி மனம் நாடாதே
நான் நானாக இருக்க மட்டும் அருள் புரிவாயய்யா
வாய் மூடி திரிந்தாலும்
உள்நாவில் தேன் சொட்டுதைய்யா
உனை நினைக்கையில்
உயிர் உருகி உருகுளையுதைய்யா
'வாட'கை கொண்டு தீண்டுகையில்
காதலின்பம் படருதைய்யா
நின் மேல் இச்சை கொண்டதால்
கச்சை இழந்து
பிச்சை புகினும்
நினையே நினைப்பேனைய்யா
பள்ளியில்
படைகளுக்கு பஞ்சமில்லை
கல்லூரியில்
கலாட்ட அரங்கேராத நாளில்லை
நாட்கள் கழிய நிலை மாறாத
மனிதனாய் வலம் வந்தான் - இவனை
பார்த்து நண்பர்கள் நகைக்க
கரம் பிடிக்க நினைத்த காதலியும் கைவிட
பெற்ற பெற்றோர் வருந்த
சுற்றத்தாரும் சொந்தமும்
வீட்டின் சுமை என கருத
நாணத்தின் உச்சியில்
வெட்கம் வர - அப்போது தான்
வாழ்க்கை புரிந்தது அவனுக்கு
மங்கள நேரம் பார்த்து
தாலி கட்டுவீர்
வந்த வரனை
வரமென்று வாழ்வீர்
மனையடி சாஸ்த்திரம் பார்த்து
வீடு கட்டுவீர்
குடி புகுந்து
குதுகலம் அடைவீர்
குடும்ப சுமை ஏற
கொழப்பம் கொள்வீர் - பின்
மனையாள் அடி சாஸ்த்திரம்
புரியாமல் பிதற்றுவீர் புலம்புவீர்
சங்கமித்த உடல் மனங்களுக்குள்
சங்கடங்களை விதைக்காதீர்
வாட மலராய்
மனதில் மலர்ந்து
தாழம் பூவாய்
மனம் கமலும்
காதலியை நினைத்தால்
இதழ் விரியும்
புன்சிரிப்பு மட்டும் மிஞ்சுகிறது
இது என்ன காலம்
பெண்ணை பார்த்தாலும்
கற்பூரமாய் காதல் பற்றுகிறதே
ஆனால் ஒன்று
கண்கள் முகம் தவிர
மற்ற பாகம் பார்க்க மறுக்குதே
அவள் முன் சென்றால்
திரும்ப சொல்லி மனம் ஏங்குதே
நண்பர் நேரம் குறைத்து
சன்னல் வழி உனை கான காத்திருக்கிறதே
இப்படியே எனது காலம் கரைகிறதே
தூக்கத்துக்காக ஏங்கும்
துன்பம் நிறைந்த மனங்கள்
நகர் வலம் வருகின்றனர் - இந்த
நகர வாழ்க்கை
நரகத்தினும் கொடிது

காதல் பயணம்


பேருந்து உந்தி முன் செல்ல - என்
நினைவு பிந்தி பின் சென்றது
பேருந்து எதிர்காலம் நோக்கி செல்ல
உடல் நிலைத்து நிகழ்காலத்தில் நிற்க
நினைவு மட்டும் இறந்த காலத்தில் நீந்தியது
ஜன்னல் வழி காட்சி காட்ட - அவள்
தலை முடி என் முகம்
உரசிய சுவடு மாறவில்லை
என் ஐவிரல் இடுக்கில் - அவள்
நால் விரல் சேர இறுக்கி
மறவாதே என்றதும் மறக்கவில்லை
ஊரார் பார்ப்பது மறந்து - அவளை
ரசித்த நேரம் மறையவில்லை
தோல் சாய்ந்து
பார்த்த பார்வையின் ஏக்கம்
நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை
தோலும் தோலும் உரசி
அடி வயிற்றில் தோகை விரிந்ததை
தோண்டி புதைக்கவில்லை
தாய் மடியாய் தலை சாய்ந்தேன் - அவள்
காதலியாய் காது கடித்தது நினைவிலக்கவில்லை
நான் உச்சியில் இட்ட முத்தம்
அவளை மொத்தமாய் ஊமையாக்கி
கள்ளச்சிரிப்பு கொண்டது கலயவில்லை
வெட்கம் தாளாமல் தலை குனிந்து
என் மார்பில் இட்ட முத்தம் கரையவில்லை
வலக்கரம் கொண்டு முகம் தூக்க - அவள்
ஏக்கங்களை கண்ணில் காண்பித்தது அழியவில்லை
தொடாத பாகம் தொட
ஓட்டுநர்
நிருத்தியை தீடிரென்று அழுத்த
நிலை தடுமாறி ஒரு நிலைக்கு வந்து
அருகில் இருந்த இருக்கையை பார்த்தால்
யாரோ!!!
சிரித்துக் கொண்டு
உடலும் நினைவும் ஒன்று சேர
பயணமானோம் நிகழ்காலத்தில்
யாரேனும் என் தோல் சாய்ந்தால்
இனியவளின் ஞாபகம் தான்
அவள் முகம் காணாத போதும்
என்னவளின் காம கண்கள்
சிந்தையில் மறைவதில்லை - அந்த
கண்கள் சொன்ன பாடம்
காவியங்களும் கவிஞர்களும்
உணர்த்த மறந்த உணர்ச்சி
உடை எடுப்பும்
நா நுனி ஆங்கிலமும்
நாகரிகத்தின் முழு உருவமாம்
பிறர் வருந்த தான் வருந்துவதும்
பிறர் அழ தான் துடைப்பதும்
காட்டுமிராண்டித்தனமாம்
என்ன உலகடா !
உதவுவதும் உணர்ந்து தெளிவதும்
பைத்தியக்காரத்தனமா?
கண்டும் காணாது போல் இருப்பது
நாகரிகமா?

முதல் இரவு


அவன் அவளை அறிய
அவள் அவனை புரிய
காத்திருக்கும் நேரம்
தந்தை தாய்
உறவினர் நண்பர்
காணாத முக பாவனை
அரங்கேற போகும் நேரம்
ஒழித்து வைத்த காமம்
ஒட்டு மொத்தமும்
முண்டியடிக்கும் நேரம்
காணாத காட்சி காண
துடியாய் துடிக்கும் நேரம் - இத்தனை
நேரம் கூடி இருந்தும்
காரணம் இல்லாமல்
பயம் கொள்ளும் மனசு
வர்ணம் பூசி
மல்லி சூடி
ஓர விழியில்
எனை அழைக்கிறாள்
காணாது போல் நான்
காட்சி மற்ற
இருமலும் சிருமளுமாய்
எனக்கு உணர்த்தினாள்
தண்ணீர் வேண்டுமா? என நான் கேட்க
கண் திறந்து
கோபம் வெளி வர
எனை நோக்கி சென்றாள் - பின்
ஆறுதலாய் அரவணைக்க சென்றால்
முகம் காட்ட மறுத்து
சுவரை பார்த்திருந்தாள்
கரம் பிடித்தால்
காரணம் கேட்கிறாள்
நாடி தூக்கி முகம் பார்த்தால்
எனை நாடாதே என்கிறாள்
கன்னம் வருடினால்
தனை புரியாதவன் என்கிறாள்
இடை தொட்டால்
கடை விழியில் முரைக்கிறாள்
தோல் பற்றினால்
தேளாய் கொட்டுகிறாள் - அவள்
கோபம் கலைந்து
ஆடை கலைவதற்க்குள்
அப்பப்பா இந்த சுகம்
வாழ் நாளும் மறவாது
வஞ்சனைகள் வரிசையாக
வாள் ஏந்தி நின்றாலும்
தஞ்சம் என்று
எவரையும் நாடாதே
பஞ்சம் வராமலே
வறுமை வந்து வாட்டினால்
தஞ்சம் என்று
எவரையும் நாடாதே - ஏனெனில்
பாதுகாப்பு என்றாலே
அது சுதந்திரத்தின் முடக்கம் தான்
கல்லறை பஞ்சணையில்
புழுக்களுடன் புணரும் - இந்த
இழி உடல் மீது
காமம் கொண்ட
காதல் எதற்கு?

தமிழ்


தோன்றலரியா தொன்மையானவள்
அரசன் அரவணைப்பிலும்
புலவர் புகழிலும்
சதியின்றி சங்கத்தில் வளர்ந்தவள்
தொடர்புக்கு தோன்றியவள்
தோகைவிரித்தாடுகிறாள்
பழமை மரபு மறவா
அறவழி நடத்தி செல்பவள்
அஞ்சாமை கொள்கை பரப்புபவள்
நட்புறவு நாடி வருவோர்
நல்லவரெனில் 'பிசிர்' போல் உயிர் தருபவள்
பழிவாங்கும் பண்பை
பாசறையிலும் கல்லாதவள்
இடையூர் ஆயிரம் வந்தாலும்
பேர் இடியாய் இடித்து
மின்னலாய் தகர்ப்பவள்
எளிதில் பகைமை கொள்ளாமல்
பாச வலை வீசுபவள்
மாற்றார் கருத்துக்கு
கருத்துன்மை காண
கனிவுடன் செவி சாய்பவள்
உரிமை என்றால்
உறவறுத்து உரை வாள் ஏந்துபவள்
வஞ்சனையுடன் வருபவர் வறியர் என்றால்
வாகை சூட வைத்து அழகு பார்ப்பவள்
பழி வருமெனில்
தாலி கழற்றி எறிபவள்
ஆத்திகனோ நாத்திகனோ
திராவிட உணர்வு வேண்டுபவள்
வீல் என்று கதறி வரும் பிள்ளையை
வீரமாய் வளர்ப்பவள்
விவேக வேதியலை
கற்றுக் கொடுப்பவள் - எனவே
வீரத்திற்கும் விவேகத்திற்க்கும் பஞ்சமில்லை
போவது தன்மானமெனில்
துறப்பது உயிர் என்றிருப்பவள்
தன் குணத்தை தாங்கி வரும்
தமிழனின் வாழ்வு கண்டு
தலை நிமிர்ந்து நடைபோடுபவள்
அரசாட்சியில் அரியணை ஏறியவள்
மக்களாச்சியிலும் மணம் வீசுகிறாள் - எனவே
வரலாற்றை மிஞ்சுபவள் என்போம்
போதனைகள் வேதனை மிக்க
பிரச்சனையாய் மாறும்
சகிப்புத்தன்மையில்ல மணவாழ்க்கை
சண்டையில் தொடரும்
ஆணின் அரணை அறுவை செய்ய
விடுதலை பத்திரம் தேடும் பெண்ணே!
பெண்ணின் பேணுதலை தகர்க்க
விவாகரத்து தேடும் ஆணே - நீ
உணர்ச்சியில் புணர்ந்து
பெற்ற பிள்ளையை மறந்தாயோ

மலையில்...


நீல் எழில் அரசி
நீள கார்கூந்தால் கொண்டு
மனம் கவர் மாந்தராய்
மயக்கம் தருகிறாள்
மஞ்சு எனை தழுவ
நெஞ்சு தானே விரிய
மரங்களுடன் பச்சையாய்
புலப்படுகிறது உணர்வு

கிழவன் கூற்று


என்னதான் அர்ச்சுனன் வேடமிட்டாலும்
முதலிரவில் துரியோதனன் வேலை பார்க்கணும்
தொட்டில் பழக்கம்
சுடுகாடு மாட்டி என்பாங்க - அவளுக்கு
மோகத்தீ வளரும் போது
ஆசை கொண்டு அணைக்க வேண்டும்
அலுத்து எழும் நேரம்
கூப்பிட்டால் போக வேண்டும் - இல்லையேல்
காரணமில்லா சண்டை
பண சண்டை
மன சண்டை
மறுநாள் மதிய சாப்பாட்டுடன் முடியும்
இச்சண்டை இச்சை தீரும் வரை வளரும்
நம் உயிர் செலவில்
பிள்ளைகளுக்கு சொத்து வரவு வேண்டுவாள்
எல்லாம் இளமையின் பாதுகாப்பில்
காலம் கடத்த
ஆண்பிள்ளைக்கு
"ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் "
பெண்பிள்ளைக்கு
"ஆசை ஆயுளுள்ளவரை
மோகம் மேனியழியும் வரை"
கணவன் மனைவி மனஸ்தாபத்திற்கு
கட்டிலில் இடைவெளியே காரணம்
கட்டி புரண்டால் அன்பு தானா வரும்
அலுத்து எழுங்கள்
சலித்து எழாதீர் - எழுந்தால்
நீ சம்சாரம் துறந்த சந்நியாசி

கணவன் கூற்று


வாழ்வை தொடர
ஆசியும் ஆதரவும் வேண்டிய பெற்றோரால்
பாச வாளால் துரத்தப்பட்டோம் - வழியின்றி
நால்வர் சூழ நால்வேதங்கள் ஓதின
நகையாடி விளையாடி பழகியவள்
நாணம் கொண்டாள்
மாலை பொழுதின் விடியல்
இவள் விழியில் புலர்கிறது
ஆகாரம் ஊட்டினாள்
மஞ்சள் மணம் கமல
மஞ்சத்தில் மல்லியாய் உதிர்ந்தாள் - இவ்வாறு
இன்பத்தின் இயற்கையாய் இருந்தவள்
நீலிக்கண்ணீரில் காரியம் சாதிக்கிறாள்
வீண் வம்பு தொடுத்து
வெட்டி கௌரவம் பூணுகிறாள்
கோபங்களை குழந்தை மேல் வீசுகிறாள்
'போதுமடா புற்றீசல் வாழ்க்கை' என புலம்பவிடுகிறாள்
'அழகு பதுமையின் நெஞ்சுக்குழி
படுபயங்கர பாதாள இடுகுழி
இமை மூடும் போது
விழிகள் எதை காண்கிறதோ - அதுபோல
பெண்கள் மணம் விளங்காததே' என புரிகிறது

காதலன் கூற்று


விழா தள்ளுபடியில்
முந்திக்கொண்டு தேடுதல்
தேர்தலில் தேர்ந்தெடுத்து
தேர் தள்ளி உலா போக
தேவதை மனத்தேர் ஏற மறுக்க
தேன்மொழி பேச்சும்
மயக்கும் பார்வையும்
தானே தேறேற்றியது
காதலியாய்
கால் நடையில் வழி செல்ல
காமம் ஒருபுறம் இழுக்க
கற்பனை மறுபுறம் பறக்க
எதிகால சாலை கேள்விக்குறியாய்
ஆச்சரித்த போதும் சந்தோஷித்திருந்தோம்
நாணத்தில் ஒழிந்து
உண்மை முகம் மறைத்து
மோக முகம் காட்டும்
தேய்பிறை நிலவே!
நீ என் காதலி

நாணம் விலகி
மோக முகம் குறைய
உண்மை முகம் காட்டும்
வளர்பிறை நிலவே !
நீ என் மனைவி

முன்பு அடங்கியவள்
அடக்க முயல்கிறாள்
அடங்கினால்
அடிமையாய் திரிவேன்
அடக்கினால்
ஆண்பிள்ளையாய் வலம் வருவேன்
அடங்கியும் அடக்கினால்
சந்தோசமாக வாழ்வேன்
சங்க கால மூவர்
அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர்
சிவபுகழ் வளர்த்தனர்
எங்கள் கால மூவர்
பெரியார் அண்ணா கருணாநிதி
திராவிட உணர்வை வளர்த்தனர்
இவர்கள் வழியில்
தமிழகம் செழிக்க
கங்கை இந்துமாகடல் சேர வேண்டும்
சேது கால்வாயில் கப்பல் நீந்த வேண்டும்
சித்த மருத்துவம் முதன்மை பெற வேண்டும்
அறிவியல் நடப்பு முறையறிந்து
செயல் திட்டம் தீட்ட வேண்டும்
ஏர் உழும் கிழவன்
உண்டு ஏப்பம் விட வேண்டும்
விவசாயம் அறியாத தமிழன்
ஒருவரும் இலர் என்ற நிலை வேண்டும்
கைத்தொழிலை
கட்டாய பாடமாக்க வேண்டும்
மன உறுதிக்கு பள்ளியில் தியானம்
நடைமுறை படுத்த வேண்டும்
ஊழல் ஊற்றை
காலால் மிதித்திட வேண்டும்
சாதி என்னும் சாக்கடை புழுவை
மருந்தடித்து அழித்திட வேண்டும்
தமிழ் திராவிட உணர்வை
பிறப்பிலிருந்து ஊட்டிட வேண்டும்
மானம் பெரிதென உணர்த்திட வேண்டும்
வேண்டுவென வேண்டி விடைபெறுகிறேன்

கலைஞருக்கு......


பெரியார் சீராட்டி
அண்ணா பாராட்டி
தனித்தன்மையாய் மணம் வீசும்
குவளை மலரே!

இங்கோ? அங்கோ? எங்கோ?
எங்கள் "கோ" என்று தேடுகையில்
இருள் நீங்க
காலை பகலவனாய் உதித்த
உதய சூரியன் நீ

போர்வைக்குள் பதுங்காமல்
போர்க்களம் தேடித்தேடி
வென்றவன் நீ

தடியடி பெற்று
வள்ளுவன் சமைத்த தமிழுக்கு
செம்மொழி கனி
படைத்தவன் நீ

துரோகங்கள் வஞ்சனைகள்
ஆயிரம் கண்டு
அதை அனைத்தையும்
துடுப்பாய் கொண்டவன் நீ

உனை பார்த்து வாரிசு
அரசியல் நடத்துகிறான் என்கின்றனர்
வரியவருக்கு வாரி இசையும்
அரசியல் நடத்துபவன் நீ

சாதிகள் சங்கமிக்கும்
சமுத்திரம் நீ

திராவிடராகிய எங்களின்
கருப்பு கண்ணாடி அணிந்த
கர்ணன் நீ

எளியோர் வாடுகையில்
கரம் நீட்டிக்காக்கும்
வலுக்கை உடையவன் நீ

நெட்டையனை நம்பினாலும்
குள்ளனை நம்பாதே - இது பழமொழி
சாத்திரங்களை பொய்யாக்கும்
இந்த குள்ளனை நம்பித்தான்
இந்த தமிழினமே

நீ என்னினத்தின் இதயத்துடிப்பு
உன் ஓய்வு அன்று
தமிழினத்தின் மரணம்

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
இது பிறர் கூற்று
என் மட்டில்
நீ வயதான வாலிபனே
வாழ்க நீ பல்லாண்டு
உராய்வுகளில் தான் உலகமே
சம்பவத்தின்
முடிச்சில் தான்
சங்கடங்கள் அவிழ்கின்றது
சங்கடங்களின்
முடிச்சில் தான்
சீண்டல்கள் அவிழ்கின்றது
சீண்டல்களின்
முடிச்சில் தான்
சண்டைகள் அவிழ்கின்றது
சண்டையின்
முடிவில் தான்
வெற்றியோ? தோல்வியோ? அவிழ்கின்றது
உராய்வுகளில் தான் உலகமே

முதல் பின்னிரவு


பஞ்சனை கசங்கி
பூக்கள் நசுங்கி
ஒரு போராட்டம்
நடந்த களைப்பில்
ஆடைகள் அவிழ்த்து
காற்று புகா நெருக்கம் கொண்டு
காலை பனித்துளி போல்
உடலெங்கும் வியர்வை தளைத்திருக்க
கணவன் மனைவியிடம்
"பாலுண்டேன் தேனுண்டேன்
இரண்டும் கலந்துகொண்டேன்
இன்று உண்டா தெவிட்டாத
உணவை உண்டதில்லை" என்றான்
அவள் கூச்சத்துடன் சிரித்து
முகம் திருப்பினாள்
விடுவானோ இவன்
தன் விரல்களால்
கன்னங்களை தடவி திரும்பச் செய்தான்
"மோக பார்வையாலும்
மெல்லிய சிரிப்பாலும்
எனை தோற்க்கடித்தாயடி" என்றான்
"தோற்றது நானே" என்றாள்
"அன்பே உன் முகம்
இந்த இரவிலும் சந்திர ஒளியை
மிஞ்ச காரணம் என்ன? " வினவ
"இந்த சூரியகிரகணம் தான்
காரணம்" என்றாள்
"உனை வர்ணிக்க ஆசையாய்
உள்ளேன் அனுமதி கிடைக்குமா? " என்றான்
அமைதியாய் ஆர்ப்பாட்டம்
செய்யத்தெரிந்த உங்களுக்கு
அனுமதி என்னிடம் எதற்கு?" என்றாள்
"கண்ணே வில்லின் உட்புறமாய்
அழகாய் செதுக்கப்பட்ட இடையில்
இருக்கின்ற காலம் வரை
என் இரு(க்)கை அதில் தான்"என்றான்
"வேண்டாம் வினையின் விளைவரியாரே?" என்றாள்
மோகப்பார்வையால்
காமந்தனை கடந்து
கலப்படமற்ற காதலை பெற்று
மனக்காயங்களை உற்று
நேரம் கழிந்தது
மார்பெனும் மண்டபத்தில்
தன் தலை சாய்த்து
"உமை அறிய ஓர் இரவு போதுமோ?
என் உள்ளங்கவர்ந்த கள்வனானாய்" என்றாள்
"மொழிகளில் தேன் தெளிக்கும்
வித்தையை எங்கு கற்றாயோ?
இந்த இனிய சொற்களில்
தலை கிறுகிறுத்து போனேனடி" என்றான்
வெட்கம் தலைக்கேற முகம் மூடினாள்
"அழகே" என்றழைத்து
தன் விரல்களால் அவள் விரல் தொட்டு
"உன்னிடம் ஆயுள் கைதியாகிய நான்
இந்த விரல் சிறையிலிருந்து
என்னழகை மீட்பது எப்படியோ? என்றான்
சூரியரை பார்த்த பனித்துளியாய்
காலை மலரும் மொட்டாய்
இளந்தென்றலில் அசையும் செடியாய்
தத்தித்தத்தி நடை பழகும் குழந்தையாய்
அவள் முகம் காட்ட மெய்மறந்தான்
புன்னகை செய்து புன்னகை செய்து
இருவரும் மனம் தனை திறந்தனர்
முன்னடந்தவையும்
பின் செய்வது என்ன? பேசுகையில் - இளந்தென்றல்
மேனி மீது பட இருவருள்ளும் மோகமுள் பாய்ந்ததே
"என் உயிரே எப்போதும்
இந்த 'இடைவிடா' அன்பு நிலைத்திருக்க
நம்முள் மனக்கசப்பு வராமலிருக்க
நாம் நல்வாழ்வு வாழ..."சொல்வதரியாது திகைத்தான்
"எப்போதும் நீங்கள் வேண்டும்" என்று முடித்தாள்
விழிகளால் அவளை அருகில் அழைத்தான்
தன் விரல்களை அவள் மேனியெங்கும் ஓடவிட்டான்
கூச்சம் தாளாமல் தாவி கட்டி அணைத்தாள்
மதிமுகம் தூக்கி சங்குகழுத்தில் முத்தமிட்டான்
காதில் படர்ந்திருந்த முடியை நீக்கி உஸ்னமூச்சிட்டான்
செய்வதறியாது இன்னும் இறுக அணைத்தாள்
காதோரமாய் அவன்
"பெண்ணே! தீயோன் நல்லாள் மேனி தீண்டவே
கூச்சம் பரவும் முன் தீ பரவுமோ? என்றான்
"ஆம்! தீயோனேன்றால் தீயாய் மாறுவாள் பெண்" என்றாள்
"நான் உனை தீண்டும் போது
தீ பரவவில்லையே! எனை கள்வன் என்றாயே?" என்றான்
சிரித்தபடி"அத்தான், மனங்கவர் கள்வன் வேறு
மாந்தர் கவர் கள்வன் வேறு.
நிருபித்துவிட்டீர் நீர் மனங்கவர் கள்வனென்று" என்றாள்
பொழுது புலர்ந்தது
இருவரும் ஏக்கப்பார்வையால்
"பகல் போய் இரவு வா" என்றழைத்தனர்
முண்டியடித்து
முகம் காண
கனவுக்குள் ஒரு போராட்டம்
இறுதியில்
வெற்றி கனவுகளுக்கே!

திறந்த விழிகளில்
பார்வை மறைத்த பாவை
பாசத்துடன் பண்புடன்
காதல் கொண்டாள்

கையினைத்து காற்றில் உலவ
தெருவில் சென்றோம் - பின்
வீட்டினுள்
முத்த சத்தம் கொண்டோம்

டேய்! எழுந்திரி
சிவபூஜையில் கரடிபோல்
தந்தை வந்தான்
கனவிலும் அவன் தொல்லை
விண்ணை பிளக்கும்
இடியோசையை மிஞ்சும்
எம்மக்களின்
தாகக் குரல்

மேனி நனைந்து வருடமாகுது
கண்ணீர் ஊறி மாதமாகுது
வாய் உலர்ந்து நாளாகுது - மொத்தத்தில்
அனைவரும் நடை பிணமானோமே

பஞ்சாங்கம் பார்க்கும்
பாட்டி கூட
பஞ்சாப்பிலிருந்து தண்ணீர்
எப்போது என்றுருக்கிறாள்

ஆறு வழியோடி எமையடைய வழியில்லை
ஆஸ்தி கோடி இருந்தும் வாழ நீரில்லை
இதை கூற நாவில் ஈரமில்லை
எமை காப்போர் யாருமில்லை

சுனாமி


சுழற்சி அதிகமானால்
ஆபத்து தான்
சக்கரமோ?
அலையோ?

கடற்கரையில்
அசிங்கங்கள் தாங்காமல்
ராட்சஷா அலையால்
உலகை எச்சரித்தாயோ?

கால் முளைத்த
கவிதை என
வர்ணிக்கப்பட்ட குழந்தைகள்
என்ன செய்தனவோ?

முதியோர்கள் கயவரல்லார்
என்ன செய்தனரோ?
இவர்கள் கடலில் கலக்க
காரணம் என்னவோ?

பிள்ளை அழுதால்
பால் கொடுக்கும் தாய்
இன்று
குழந்தைக்காக அழுகிறாள்

விளையாட சென்ற பிள்ளைகளை
வீடு திரும்ப செய்யாமல் செய்த
வினையின்
விளையாட்டைப் பார்த்தால் பயங்கரம்

காலையில் ஊடல் கொண்டு
மாலையில் மதி மயங்கி
மஞ்சம் தேடியோர் - இன்று
தனியே வாடுகின்றனர்

உடற்பயிற்சி செய்தவர்களின்
உடையற்ற உடலை
இன்று
கடற்கரை மணலில் கண்டெடுக்கிறார்கள்

இயற்கையை காலையில்
ரசிக்க வந்தவர்கள் எல்லாம்
இயற்கையோடு
இறுதிப்பயணம் மேற்கொண்ட கொடூரம்

பாத சுவடுகளை மட்டும்
கரைத்துக் கொண்டு இருந்தாய் - இப்போது
பாதங்களோடு
கொண்டு சென்றாய்

கடலின் உப்பு
இனி
அதிகரிக்கும்
எங்களின் கண்ணீரால்

கடற்கரை
இனி
எங்களின் சோகம் பாடும்
மயான கரை

தாயிழந்து தந்தையிழந்து
நிற்கும் பிள்ளை
இனி
படிக்குமோ? பிச்சை எடுக்குமோ?

மக்களைப் பெற்றெடுத்து
மகிழ்ச்சியுடன் இருந்தவர்கள்
இனி
முதியோர் இல்லமோ? பிச்சை எடுப்பாரோ?

வீடு இழந்தால் கட்டிக் கொள்வோம்
சொத்திழந்தால் பெற்றுக் கொள்வோம்
இங்கு
தாலி இழந்து நிற்கும் பெண்களின் கதி என்னவோ?

இவர்களுக்கு உதவ
ஊர் ஊராய் திரளும்
மனிதநேயம் கொண்ட மக்களின் பாதம்
தொட்டு வணங்குகிறேன்
உண்மையில்
உணர்வின்
உணர்ச்சிகளை அலட்சியப்படுத்தும் உலகு
உள்ளமெனும்
உரங்களுக்கு
உதாரணம் கேட்கும் உலகு
உழைக்கும்
உடம்பின்
உத்திகளை மிஞ்சும் உலகு
உதிர்கின்ற
உறவுகளுக்கு
உத்திரவாதம் தேடும் உலகு
துன்பத்தின்
சொர்க்கம் கூட
சோம்பேறிகளுக்கு இல்லை

சங்கடங்களின்
சாமர்த்தியம் எல்லாம்
சாணக்கியனிடம் செல்லாது

ஏமாற்றங்களின்
ஏக்கம்
ஏற்றத்திற்கு உதவாது

கஷ்டத்தின்
கட்டளை
ஓர் அனுபவம்

கவலையின்
காதலில்
பக்குவப்பட்டுக் கொள்

சோகத்தின்
சூரியனில்
விழித்துக் கொள்
நித்தம் நீராடி
நெற்றி நிறைய
குங்குமம் பூசி
மேனி எங்கும்
சந்தானம் தடவி
மௌனநடையில்
கர்பகிரகத்துள்
மலர் தூவி
மந்திரம் ஓதி
தந்திரம் செய்வான் - இந்த
தஞ்சம் புகுந்த தலைவன்
காவி எனும்
சாவி போட்டு
கைவண்ணம் காட்டுவான் - இந்த
கைதாகாத கைதி
இறை உணர்வை
புறத்தே கொண்டு
ஆசைகளுக்கு வேண்டுவான் - இந்த
ஆசை துறந்த ஆசாமி
பறவை சிந்தும்
பழம் தான்
மரத்தின் மூலம்

காற்றில் உதிர்கின்ற
இலையும் மலரும்
மண்ணின் உரம்

பயனில்லாத
மொட்டை பனைமரம் தான்
கரையான் வீடு

தேவையில்லா பொருள் என்று
நினைத்தவை எல்லாம்
ஒரு வகையில் எதற்காவது பயன்படும்

மனிதனுக்கு மட்டும்
பயன்பட்ட பழைய மொழி
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்"
அனைத்துயிருக்கும்
பயன்படும் புது மொழி
"சிறு கரும்பும் எறும்புக்கு உணவாகும்
எறும்பு கரும்புக்கு உரமாகும் "
எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கள்
ஏகப்பட்ட ஏலனங்கள்
வியர்வையும் வியக்கும்
இவண்
வேலையில்லா பட்டதாரி

சிலரின் உறவு


ஆயிரம் உதவி
வாய் வார்த்தைகளில்
ஆபத்தெனில்
வாய்மூடி பறப்பர்
ஆதாரங்கள் எல்லாம்
ஆதாயத்திற்காக சேகரிப்பர்
சட்டி சோறு தின்றாலும்
நன்றி மறப்பர்
உயர்வை பார்த்து
வயிற்றில் எருச்சல் கொள்வர்
தாழ்வை பார்த்து
அகம்தனில் மகிழ்வர்
முகஸ்துதி பாடி
சுற்றி பள்ளம் பறிப்பர்
எதிர்ப்புகளை
உருவாக்குவதில் வல்லவர்
இவர்களின் சம்பாத்தியமே
புறங்கதையில் தான்

கும்பகோணத்தின் தீ (16/7/2004)


இளந்தென்றல் தவழ்ந்த காலை
கண்விழிப்பில் என்னென்ன எதிர்பார்ப்போ?
தாயின் மார்பு சூட்டிலும்
அடிவயிற்று அனலிலும்
குளிர்காய்ந்த பிள்ளைகள்
ஆடி மாதத்தில்
அடிவயிறேரிய தீக்கிரையானரே
தந்தையின் பாசத்தில்
வழுக்கி நடை பயின்ற பிள்ளைகள்
தப்பி பிழைக்க முன்டியடித்தனரே
காலையில் டாட்டா சொல்லிச் சென்ற பிள்ளைகள்
வாழை இலையில் துன்புருகின்றனரே
கல்வி பயில பள்ளிக்கு சென்ற பிள்ளைகள்
பாடையில் வீடு திரும்பினரே
ஐயகோ!
கனிமொழி பேசி
பல ஆசைகள் நெஞ்சில் புதைத்த பிள்ளைகள்
கரிக்கட்டைகளாய் மண்ணில் விதைக்கப்பட்டனரே
இந்த பிஞ்சுகளை பார்க்கையில்
நெஞ்செனும் பஞ்சு கருகுகிறதே
நண்பர்களே!
கோபம் வேண்டாம்
காதலுக்கு எதிரியல்ல
உணர்ச்சிபூர்வ காதல் வேண்டாம்
உணர்வுபூர்வ காதல் கொள்
காதலியை காதலிக்கும் முன்
காதலை காதலிக்க கற்றுக்கொள்
காதலின் ஆழம் புரிந்து
கால் எடுத்து வை
புனிதமான காதலுக்கு
புத்தன் அன்பு என்று பெயரிட்டான்
புத்தனுக்கு காதல் வந்ததால்
புத்தமதம் உண்டானது
இந்த காதல் எங்கே?
இன்றைய காதல் எங்கே?
உன் காதலால்
நீயும் பிறரும் வாழ வேண்டும்
இதயமெனும் இருட்டறையில்
இரத்த ஊற்றாய்
இசையெனும் உணர்வாய்
காணாத கடவுளின் உருவாய் - இப்படி
காதலுக்கு கவிஞர்கள் சில கோடி
ஊரெங்கும் தேடி
உறவாய் நாடி
விழிகள் மூடி
எண்ணங்கள் ஓடி
சிந்தையில் கனவில் பாடி - இப்படியும்
காதலுக்கு கவிஞர்கள் பல கோடி
கோடி கோடியாய் கவிதை பாடி
காதலை வாழவைக்கும் கவிஞர்களே!
காதல் ஒன்று தான் உலகில் உள்ளதோ?
காதலை தவிர வேறொன்றும் உள்ளத்தை தொடவில்லையோ?
ஒரு வேலை சோற்றுக்கு மனிதன்
பாலுக்கு அழும் மழலை பார்த்ததில்லையோ?
விபச்சார ஒழிப்பு
மதுவிலிருந்து விடுதலை
திருட்டை திருட வழிமுறை
நல்லொழுக்கப் பாதையில் மனிதன்
இவற்றில் சிந்தையில்லையோ ?
அறிவியல் நிறைந்த உலகில்
அவசர வாழ்வு வாழும் மனிதர்கள்
உள்ளத்தில் உண்மைதனை புதைத்து
நகையாடி பொய் நட்பு வளர்க்கிறார்கள்
நாடி வருபவரிடம் நடித்து கைநீட்டுகிறார்கள்
பசி என்றவர்களிடம் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்
ரத்த பாசமே ரத்தம் பார்க்கும் காலம் - முன்பு
பேய் கதை சொல்லி
பேயை உருவாக்கி பயம் வந்தது - இன்று
நள்ளிரவில் திருடர்களால் உறக்கம் போகிறது
நோயும் பயமும் வளர்கிறது
பொய் கதை சொல்லி
பயம் வந்த காலத்தில் கூட
உயிருக்கு உத்திரவாதம் இருந்தது - ஆனால்
இந்த ஜனநாயகத்தில்...
உயிரின்
உத்திரவாதம்
தெரியாமல் திரியும்
மனிதர்களே!

நரிகளின்
நவரச நாட்டியத்தை
அரங்கேற்றுவர்

நஞ்சு கொண்டு
நகையாடும்
நல்லோர் நட்பு கொள்வர்

பூர்வஜென்ம பந்தமென்று
பெண்டீரும் ஆடவரும்
காதல் கொள்வர்

நாட்டை கருத்தில் கொண்டு
இவர்கள் திருந்தபோகும்
நாள் எது?
அதிகாலை பூமிக்கிறங்கும் பனித்துளியாய்
புனிதனாய் தோன்றிய மனிதரே
புழக்கத்திற்கு நீ தோற்றுவித்த நாணயம்
இன்று நாணயமிழந்து தவிக்கிறது
பண்டம் மாற்றும்முறை
பணம் மற்றும்முறையாய் லஞ்சமாய்
நாடெங்கும் தலை விரித்தாடுகிறது
இதுபோக காசுக்காக
காதல் கல்யாணம் கருமாதி கூட
தோற்றம் என்றாலே
பிரச்சனைதானோ ?- அது
மனிதனோ? பணமோ?
தனிமையில் வாடும் மீராவே வருந்தாதே
உனக்காக கண்ணன் என்றும் உண்டு
பாடல்கள் பாடி
தம்புரா மீட்டி
கண்ணனுக்கு புரியாத மொழிகள் எதற்கு?
நீ சொல்லும் மொழி
அவனுக்கு புரிந்ததோ என்னவோ?
அவனுக்கு புரிந்த தெரிந்த
மொழிகளில் பேசினால் போதுமே!
நீ அவன் பின்னால் என்பது
அவன் உன் பின்னால் என்று மாறுமே
அவன் வருவான் என்று காத்திருந்து
காலம் கடத்தாதே
பழைய புராண கதையை கிழித்து
புதிய புராணம் நீ படிக்க வேண்டும்
நடித்த நாடகங்களெல்லாம் போது
நாகரிக போர்வையில் நடமாடும்
நவநாகரிக பிணமா நீ?
நகைக்கும் போது
அகநகையில் அழுகை எதற்கு?
அமைதியாக இருந்த மனதில்
அனுமதியின்றி அழுக்கை புகட்டுவது எதற்கு?
மானமுள்ள மனிதா!
மாண்டு போன மரபுகளிலிருந்து வெளிவா
மஞ்சத்திலே மாயயை விட்டுவா
மகத்தான மனப்பான்போடு நடந்துவா - எல்லாமே
ஏக்கங்களின் ஆரம்பத்தில் தான் இருக்கிறது
பிரளாதா வார்த்தை
வாய் பேசி
கேட்டவற்றை ஆராயும்
செவி கொண்டு
பார்ப்பவையை அனுபவிக்கும்
கண்கள் கொண்டு
உதவி செய்யும்
கரங்கள் கொண்டு -மாறாத
மனம் கொண்டு -இவ்வழி
கால்கள் நடந்தால்
நீயும் ஒரு நாள் ஞானியாவாய்
பத்து நிமிடம் செதுக்கி
பத்து மாதம் மெருகூட்டிய
சிற்பம் நீ !

வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா

மண்ணியலை விட
விண்ணியலை விட
உன்னியலை அறிய
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா

கயிறில்லா காளையை போல்
காதல் வெறி கொள்ளாமல்
கண்மூடிக் கிடக்கும் - உன்
திறமையை அவிழ்த்து விட
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா

தானம் கேட்டு வந்தோருக்கு
தாமதமும் தயக்கமும்மின்றி
ஈன்று ஈன்று செங்கை கொண்டு
ஈகை புரிய
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா

இவை உன்னிடத்திலிருந்தால்
வாகை வகை வகையாய்
உனை அலங்கரிக்கும்
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
சப்தத்தின் சாபத்தால்
தூக்கம் கலைகிறதடி
யுத்தத்தின் சாபத்தால்
பிணங்கள் விழுகிறதடி
முத்தத்தின் சாபத்தால்
உரிமை வளர்கிறதடி
எந்த சாபத்தால்
தீரும் என் ஆசைகளடி?
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு கண்டு
கண்களில் ரத்தம் வருகுதடி
முன்னோர் விதைத்த
மூளையற்ற விதியால்
முளைத்த முற்கள் தானடி
முன்னம் செய்த தப்பு
இன்னும் நீடிப்பதேனடியோ
குண்டுகளை விதைத்து
பிணங்களை அறுவடை செய்யும்
சபிக்கப்பட்ட பூமி இது
இங்கு குணங்களும்
பிணங்களாய் கிடக்கும் காடிது
விதைக்கப்படாத விதியை
வீணாக விதைத்து
வையத்தில் வாழும் மனிதா!
வெறுப்பை விதியின் மீது திருப்பி
மூடநம்பிக்கையின் கைகால்களை கட்டி
விதியுடன் உடன்கட்டை ஏற்றுக

தாய் பாசம்


இடுகாட்டில் என்னுடலுக்கு
இட்ட தீ அணைந்த பின்னும்
அவள் மன தீ
என் நினைவுகள் எனும்
நெய்யூற்றி விளக்கேற்றும்
தொலைக்காட்சியை உற்றுப் பார்க்கும் நண்பா
அது காட்டாது
உன் வாழ்வில் தொலைந்த தொலைகின்ற காட்சிகளை
உயிர்பித்தவள் என்றேன்
உணவு ஊட்டியவல் என்றேன்
உடை உடுப்பித்தவள் என்றேன்
மொழி தெரிவித்தவள் என்றேன்
பாசம் பொழிந்தவள் என்றேன்
நேசம் வளர்த்தவள் என்றேன்
மொத்தத்தில் தெய்வம் என்றேன் - ஆனால்
என்றேன் என்று மட்டும் என்றேன்
மறவாதே மானிடா
தாய்மையை உணர்த்தும்
தமிழை தனித்து விட்டு
தள்ளாடி தள்ளாடி
ஆங்கில போதையில் நடக்காதே
போதை உன் பாதையை மாற்றுகிறது
தாலாட்டும் தமிழை
தாலாட்டி உறங்க வைக்க நினைக்கும்
தமிழாங்கில மக்களே
சுயமரியாதையை விட்டுவிட்டு
பிறர் தரும் மரியாதைக்கு அலைவதேன்
தன்மானத்தை விட்டுவிட்டு
வேற்றொரு மானம் தேவையா?
பெண்மைக்கு அடக்கம் அழகு
ஆண்மைக்கு வீரமும் விவேகமும் அழகு
தாய்மைக்கு அன்பு அழகு
தந்தைமைக்கு அறிவு அழகு
தலைமைக்கு நேர்மை அழகு
நட்புக்கு இவையாவும் அழகு
கடலில்லாடும் தோணி கூட கரை சேரும்
மனக்கேணியில் உண்மையை புதைத்தவன்
மாளிகையில் இருந்தாலும்
மானமிக்க உயர்ந்தவர் அருகில் இருந்தாலும்
அவன் வாய் சிரித்தாலும்
அவன் நோய் தீராது
எந்த விடியலும் வீணாக விடிவதில்லை
எந்த மனிதனும் மானத்தை மறப்பதில்லை
எந்த இரவும் இறக்காமல் இருந்ததில்லை
எந்த குரங்கும் கோல் இல்லாமல் அடங்குவதில்லை
விடியும் வரை வியர்வை தான்
விளக்கு இருக்கும் வரை ஒளி தான்
விளங்காத வரை புதிர் தான்
இறந்த பின் பிணம் தான்
பணம் இருக்கும் வரை எல்லாம் உறவு தான்
குணம் இருக்கும் வரை குறையனைத்து தூசி தான்
இன்பம் இருக்கும் வரை அரட்டை தான்
துன்பம் இருக்கும் வரை யாருமே இல்லையடா ..........
வாழ்க்கையில் வசந்தம் வழி வந்து நின்ற நேரத்தில்
வாசல் கதவடைத்து சென்றவர்களே!
நேரம் காலம் கணித்து
இருக்கும் வாழ்வை இழக்காதீர்
போகும் போது பொன் எடுப்பதில்லை - அதற்காக
பொன்னான நேரத்தை வீணாக்காதீர் - இதற்காக
மரணத்திடம் மண்டியிட்டு
உயிர் பிச்சை கேட்டு வாழாதீர்

Sep 16, 2009

மரண வாக்குமூலம்

கர்பவாசல் வழி வந்த போதே
காற்று சொன்ன செய்தி இது
வாரி எடுத்து வாகை சூட
வாசலில் வருவான் காலனென்று
யாருமில்லை நினைவில்
மனதோடு மரண ஓலங்கள் மட்டுமே
மனப்புதையல் மாயரூபம் கொண்டு
கண்ணுக்கும் காலனுக்கும் நடுவிலாடுது
உயிர் சொல்லொன்று தொண்டைக்குழியில் சிக்கியது
வெளிவர முயற்சித்த வார்த்தை
மூடியிருந்த பின் வாசலை திறந்தது
வாசல் வழி மலம் சிந்தி மரணமெய்தேன் - நான்
உயிர் பெற்றதும் கொடுத்ததும் முன் வாசலில் - என்
உயிர் பிரிந்தது பின் வாசலிலே
கற்பனை கிரிடம் ஏந்தி நானிருக்க
வளைந்து நெளிந்து வரும் வஞ்சி
எனை கவி சமைக்க வைத்தாள்
சுவை கூட்ட
காமந்தனை கண்களில் ஏந்தி
கீழிதழ் மடித்து
முத்தென பல் வரிசை வைத்து
இன்ப ஊற்றாய் சொற்கள் சிந்த
காற்றோடு கைகோர்த்தாடும்
அவள் தலை மயிரில்
சொல் சிக்காமல் விளையாடும்
அவளை எழுத எழுத
கண் சிவந்து கொண்டே போகும்

மனதின் உருவம்

என் கண்ணீருக்கு
உன் இதழ் சுவை ஞாபகம் வந்ததோ
ஓயாத அலையென கன்னங்களை சுவைக்கிறதே
வியந்து உன்னித்து பார்த்தால்
நீ பதித்த இதழ் வரிகளின்
இடைவெளியில் வழிந்தது என் கண்ணீர்
மனதின் உருவம் தானே கண்ணீர்

நீயும் வாழ்க

உயிர் வாழ்வதற்கு
காதலை கல்லறையில் புதைத்தாய்
காகிதங்கள் சொல்லும் காயத்தை
கவிதை வடிவிலே
உனை இழந்தேன்
நல்வாழ்வை பெற்றேன்
உனை பெற்றிருந்தால்
வாழ்வை இழந்திருப்பேன்
காதலெனும் பொய்யுரைத்து
காயப்படுத்தி கலங்கச் செய்து
காணாமல் போன கனவே
இந்த உலகில் நீயும் வாழ்க

பேசிய கவிதை

கோட்டு சூட்டு போட்டு வரும் ராசா
கம்ப்யூடர் திண்ண காடு மேடு பாக்க வந்திங்கலாக்கும்?


இல்ல இல்ல
ஆங்கிலம் புகுந்த கிராமத்து மனிதன பாக்க வந்தேனுங்க.......

காதலியே!
அழுகை வந்தால்
எனக்காக சிரித்து விடு
அந்த கண்ணீர்
சந்தோஷக் கண்ணீராக வழியட்டும்
காதலியின் முகவரி மாறியதால்
மனைவியின் முகவரியை - என்
தமிழிலக்கியம் காட்டுகிறது

ஒரு தந்தையின் குரல்


விடிய விடிய வியர்வை சிந்தி வரைந்த கதையில்
திருத்தம் செய்திருந்தாலும் ஏற்றிருப்பேன்
பக்கங்களை கிழித்து ஓடியவரை
மன்னித்தாலும் மனவடு மாறுமா???

எங்கள் வீட்டின் முதல் இறப்பு

வீட்டில் ஒருவனாய் இருந்தவன்
இன்று ஒதிங்கி சென்றுவிட்டான்
எங்களின் பாசம் புரியாது உங்களுக்கு
கண்களால் பேசி காதல் செய்தவன்
இன்று காலனுக்கு இரையாகிவிட்டான்
நான் தெருமுனை செல்லும் வரை
இனி யார் வாசலில் நின்று பார்ப்பது
நான் வாசல் கதவருகே வந்தால்
இனி யார் வந்து வாலாட்டி வரவேற்பது
என் மடிதனில் புரள்வது பிடிக்கும்
இன்று என்னை விட மரணம் பிடித்துவிட்டது போலும்
குரைத்து என்னுடன் விளையாடியவன்
இன்று எனை மௌனமாக்கி சென்றுவிட்டான்
என் மேல் உயிராய் இருந்தவன்
இன்று உயிரற்று கிடக்கிறான்
எனை மீண்டும் சிறுபிள்ளை மனதிற்கு கொண்டு வந்தவன்
இன்று மண் சிறைக்குள் சென்றதேனோ!